Pa.Ranjith: பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாறு.. இவர் மாற மாட்டாரு

by Rohini |   ( Updated:2025-04-12 05:50:00  )
Pa_Ranjith
X

Pa_Ranjith

Pa.Ranjith: தமிழ் சினிமாவில் ஜாதிகள் ரீதியாக படங்களை எடுத்து ஏற்கனவே மக்கள் ஜாதிகளை மறந்த நிலையில் மீண்டும் தன் படங்களின் மூலம் அதை நியாபகப்படுத்தி வருகிறார் பா.ரஞ்சித். பிற்படுத்தப்பட்டவர்கள், தலித் மக்கள் என ஆரம்பத்தில் தமிழ் நாடே ஒரே சுடுகாடாகத்தான் இருந்தது. ஆனால் அது இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. எல்லாருமே கல்வி, வேலை, குடும்பம் என வெளியூர், வெளி நாடு என சென்று விடுகிறார்கள்.

அப்படி இருக்கும் போது ஜாதிகள் எப்படி தழைத்தோங்கும். குறையத்தான் செய்யும். வேண்டுமென்றால் ஜாதிகள் பெயரை ஒழிக்க முடியாது. ஆனால் அதை வெளிக்காட்டுவதில் இப்போது மக்களே ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தலித் மக்கள் எந்தளவு கஷ்டப்பட்டார்கள், உயர்ந்த ஜாதிகாரர்களால் எந்தளவு துன்புறுத்தப்பட்டனர் என்பதை இப்போது படங்களில் காட்ட துவங்கி விட்டார்கள்.

அதுவும் குறிப்பாக பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் இவர்கள் வந்த பிறகு அதிகமாக சாதி சார்ந்த படங்கள் வரத்தொடங்கியிருக்கின்றனர். இதற்கு கோடம்பாக்கத்தில் சில பேர் எதிர்ப்பு தெரிவித்தாலும் அவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்வதாக இல்லை. இந்த நிலையில் பா. ரஞ்சித் பாலிவுட்டிலும் களமிறங்க இருக்கிறார். இந்தியாவின் முதல் தலித் கிரிக்கெட் வீரர் என அறியப்படும் பல்வங்கர் பலூவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க திட்டமிட்டிருக்கிறாராம் பா. ரஞ்சித்.

பலூவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு ராமச்சந்திர குஹா எழுதிய ‘A Corner of a foreign field’ புத்தகத்தை தழுவி படமாக எடுக்க தனக்கு அழைப்பு வந்துள்ளதாக நிகழ்ச்சி ஒன்றில் ரஞ்சித் தெரிவித்திருக்கிறார். இப்படம் பேச்சு வார்த்தை நிலையில் தற்போது உள்ளதாகவும் விரைவில் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகரும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த தகவல் அறிந்ததும் ரசிகர்கள் பல பேர் கமெண்டில் ரஞ்சித்தை கண்டபடி விமர்சித்து வருகின்றனர். நீங்கள் மாறவே மாட்டீங்களா? இன்னும் எத்தனை ஆண்டுகாலம் ஜாதி ரீதியிலான படங்களை எடுப்பீர்கள். உலகமே மாறி கொண்டிருக்க நீங்கள் எப்போது மாறுவீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனெனில் இந்த கிரிக்கெட் வீரரும் ஒரு தலித் கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story