சம்பாதிச்சது எல்லாம் போச்சு!. பேசாம பாட்டே எழுதியிருக்கலாம்! கோடிகளை இழந்து புலம்பும் பா.விஜய்
திரையுலகில் பல ஹிட் பாடல்களை எழுதியவர் பா.விஜய். இயக்குனர் மற்றும் நடிகர் பாக்கியராஜிடம் உதவியாளராக இருந்து கவிஞராகி அதன்பின் சினிமாவில் நுழைந்தார். பல கவிதை புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார். ஒரு காலத்தில் முன்னணி பாடலாசிரியராக இருந்தார். இவர் கோவையை சேர்ந்தவர்.
பாக்கியராஜ் நடித்த ‘ஞானப்பழம்’ படத்தில்தான் இவர் முதன்முதலில் பாடல் எழுதினார். அதன்பின் பிஸியான பாடலாசிரியராக மாறினார். 2000 முதல் 2014ம் வருடம் வரை பல பாடல்களை இவர் எழுதினார். கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா படத்தில் ஆதிரா ஆதிரா பாடலை எழுதியிருந்தார். பல இசையமைப்பாளர்களின் இசையிலும் இவர் பாடல்களை எழுதியுள்ளார்.
குறிப்பாக வெற்றிக்கொடி கட்டு படத்தில் இடம் பெற்ற ’கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு’, வானத்தை போல படத்தில் இடம்பெற்ற ‘காதல் வெண்ணிலா கையில் சேருமா’, தெனாலி படத்தில் இடம்பெற்ற ‘சுவாசமே சுவாசமே’ ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. கருணாநிதி இவருக்கு வித்தக கவிஞர் என்கிற பட்டத்தையும் கொடுத்தார். ரஜினிக்கு சிவாஜி படத்தில் ‘ஒரு கூடை சன் லைட்’, எந்திரன் படத்தில் ‘கிளிமாஞ்சாரோ’ ஆகிய பாடல்களை எழுதினார். சேரனின் இயக்கத்தில் உருவான ஆட்டோகிராப் படத்தில் பா.விஜய் எழுதிய ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே’ பாடலுக்கு தேசிய விருதையும் பெற்றார்.
2009ம் வருடம் வெளிவந்த நியாபகங்கள் படத்திதை இவரே எழுதி, தயாரித்து நடித்தார். அடுத்து கலைஞர் கருணாநிதியின் எழுத்தில் உருவான ‘இளைஞன்’ படத்தில் நடிகராக மாறினார். அதன்பின் ‘ஸ்ட்ராபெரி’ எனும் படத்தை எழுதி இயக்கி, தயாரித்து அப்படத்தில் நடித்தார். அதன்பின் நய்யப்புடை, அப்பா ஆகிய படங்களில் நடித்தார். கடைசியாக ‘ஆருத்ரா’ எனும் படத்தை எழுதி, தயாரித்து நடித்திருந்தார். இவர் தயாரித்த மூன்று படங்களாலும் இவருக்கு பெரிய லாபம் கிடைக்கவில்லை. அதோடு நஷ்டமும் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் ஒரு ஊடகம் ஒன்றில் பேசிய பா.,விஜய் ‘வெட்கத்தை விட்டு ஒரு உண்மையை சொல்கிறேன். திரையுலகில் நான் சம்பாதித்த 5 கோடியை படங்கள் தயாரித்து இழந்துவிட்டேன். இப்போது நான் வசிக்கும் வீடு மட்டுமே என்னிடம் மிஞ்சியுள்ளது. பாட்டு எழுத வாய்ப்பு கேட்டு செல்வதற்கும் வெட்கமாக இருக்கிறது’ என ஃபீலிங்கோடு பேசியுள்ளார்.