அஜித் பாடலில் இடம்பெற்ற சர்ச்சை வரிகள்… கமுக்கமாக அரசியலை புகுத்திய பாடலாசிரியர்… அடடா!
தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் இயக்குனராக திகழ்ந்து வருபவர் விஷ்ணுவர்தன். இவர் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் “குறும்பு”. இத்திரைப்படம் சரியான வரவேற்பை பெறவில்லை. இதனை தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கிய “அறிந்தும் அறியாமலும்” திரைப்படம் ஹிட் திரைப்படமாக அமைந்தது.
இத்திரைப்படத்தை தொடர்ந்து “பட்டியல்” திரைப்படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன், அஜித்தை வைத்து இயக்கிய “பில்லா” திரைப்படம் மாஸ் ஹிட் அடித்தது. மிகவும் ஸ்டைலிஷான இயக்குனராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார் விஷ்ணுவர்தன்.
“பில்லா” திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது. எனினும் குறிப்பாக “சேவற்கொடி பறக்குதடா” என்ற பாடல் மக்களால் மிகவும் விரும்பி கேட்கப்பட்ட பாடலாக அமைந்தது.
இந்த பாடலை எழுதியவர் பா.விஜய். இதில் “ஆதித்தமிழன் ஆண்டவன் ஆனான் மீதி தமிழன் அடிமைகள் ஆனான்”, “தமிழில் பேசும் தமிழ் குல விளக்கு, வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு” போன்ற வரிகள் தமிழர் இன அரசியலை மையப்படுத்தி அமைந்திருந்தது. இந்த வரிகளை பார்த்த விஷ்ணுவர்தன் “ஏன் இது போன்ற வரிகள், வேறு வரிகளை எழுதலாமே” என கேட்டிருக்கிறார்.
அதற்கு பா.விஜய், “அஜித் போன்ற பெரிய நடிகர்கள் இடம்பெறும் பாடலில் இது போன்ற வரிகள் இடம்பெற்றால் மிகச் சிறப்பாக மக்களிடம் சென்று சேரும்” என்று இயக்குனருக்கு எடுத்துக்கூறி அதற்கு சம்மதிக்கவும் வைத்துள்ளார். இவ்வாறு கமுக்கமாக தமிழர் இன அரசியலை பாடல் வரிகளில் புகுத்தியுள்ளார் பா.விஜய்.