படையப்பா நீலாம்பரி ரோலுக்காக பேசப்பட்ட ஐஸ்வர்யா ராய்? அவருக்கு மிஸ்ஸான சான்ஸ் எத்தனை நடிகைகளுக்கு கை மாறியது தெரியுமா?
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படையப்பா படத்துக்கு நடிகைகள் தேர்வு நடந்ததே சுவாரஸ்யமான சம்பவம் என கோலிவுட்டில் பேச்சுக்கள் அடிப்பட துவங்கி இருக்கிறது.
1999ம் ஆண்டு வெளியான படையப்பா திரைப்படத்தினை, கே. எஸ். ரவிக்குமார் எழுதி இயக்கியுள்ளார். இதில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் மற்றும் சௌந்தர்யா ஆகியோருடன் அப்பாஸ், லட்சுமி, ராதா ரவி மற்றும் நாசர் நடித்திருந்தனர். படத்திற்கு இசையை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வில்லன்கள் சூழ்ந்த தமிழ் திரையுலகில் ஒரு வில்லிக்கு வரவேற்பு கிடைத்தது ரம்யா கிருஷ்ணனுக்கு தான். சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார். இப்படம் ஐந்து தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளையும் வென்றது.
ஆனால் இந்த படத்தின் கதையை கே.எஸ்.ரவிக்குமார் சொல்ல ரஜினியிடம் சென்ற போது ஹாரா என்ற ராஜா காலத்து கதை குறித்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அதில் நாயகியாக ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்கவும் தொடர் பேச்சுகள் இருந்தன. அந்த நேரத்தில் படையப்பா படத்தினை ரவிக்குமார் சொல்ல அந்த படத்தினை எல்லாம் கேன்சல் செய்யுங்கள். இந்த படத்தினை எடுக்கலாம் என முடிவெடுத்தார்.
இதையும் படிங்க: பிரபல நடிகையின் கணவரை திருமணம் செய்ய ஆசைப்பட்ட சில்க் ஸ்மிதா!.. அந்த நடிகையே கூறிய சுவாரஸ்ய தகவல்..
முதலில் நாயகியாக யாரை போடலாம் என தேடுதல் வேட்டை நடந்தது. மீனாவை போடலாம் என யோசிக்கும் போது அவரின் குழந்தை முகம் இந்த படத்துக்கு ஒப்புக்கொள்ளாது என படக்குழு தடுத்து விட்டனர். சரி வித்தியாசமான ஒரு நடிகை வேண்டும் என தேடும் போது ரம்யாகிருஷ்ணனை கேட்டு ஓகே செய்து இருக்கிறார்கள்.
நீலாம்பரிக்கு தான் வேண்டாம். ரஜினியின் மனைவியாக மீனா நடிக்க வைக்கலாம் என்ற போதும் நிறைய படங்களில் அவரை இயக்கி விட்டேன் என ரவிக்குமார் மறுத்து விட்டார். தொடர்ந்து நக்மா இரண்டு நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு விலகி இருக்கிறார். அவரை தொடர்ந்தே சௌந்தர்யா இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானதாக தகவல்கள் தெரிவிக்கிறது.