கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்து 1999ம் வருடம் வெளியான திரைப்படம்தான் படையப்பா. இந்த படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள்.
ரஜினி தயாரித்திருந்த இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி அவருக்கு நல்ல லாபத்தையும் கொடுத்தது.
மேலும் ரஜினியின் திரைப்படங்களில் அதிக வசூலை பெற்ற திரைப்படங்களில் படைப்பாவும் முக்கியமான படமாக இருக்கிறது. இந்த படத்தில்தான் ‘என் வழி தனி வழி’ என ரஜினி பன்ச் வசனமும் பேசியிருந்தார். 26 ஆண்டுகள் கழித்து படையப்பா திரைப்படம் டிஜிட்டல் பொலிவுடன் ரஜினி பிறந்தநாளான இன்று உலகமெங்கும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் இப்படம் 300 தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. இதில் ஆச்சரியம் என்னவெனில் 300 தியேட்டர்களிலும் இன்று பல காட்சிகளும் ஹவுஸ்ஃபுல் ஆகியிருக்கிறது.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் படையப்பா ரீ-ரிலீஸுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக கர்நாடகாவில் படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் செய்வது என இன்று மாலை 4 மணிக்குதான் முடிவெடுத்துள்ளனர். 77 காட்சிகளுக்கு டிக்கெட் புக்கிங் ஓப்பனாகி மூன்று மணி நேரத்தில் 35 காட்சிகளுக்கான டிக்கெட் முழுவதும் விற்று தீர்ந்துவிட்டதாம்.
இதையெல்லாம் பார்க்கும்போது ரீ-ரிலீஸிலும் படையப்பா நல்ல வசூலை பெறும் என கணிக்கப்படுகிறது.
