Connect with us
rajini

Cinema News

‘படிக்காதவன்’ படத்தில் நடித்த குட்டி ரஜினியா இது? அட இந்த பிரபல நடிகையின் அண்ணன்தானா இவர்?

Actor Rajini: தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த்.1975 ஆம் ஆண்டு சினிமாவில் அடியெடுத்து வைத்த ரஜினி கிட்டத்தட்ட அவருடைய சினிமாவின் 50 ஆண்டுகால வாழ்க்கையை நிறைவு செய்ய இருக்கிறார்.

அடுத்த வருடம் ரஜினியின் பொன்விழா ஆண்டை கொண்டாட இருக்கிறார்கள். அந்த விழாவில் ஏகப்பட்ட சுவாரஸ்ய நிகழ்வுகள் நடக்கவும் வாய்ப்பிருக்கிறது. அவர் செய்த சாதனைகள் ஏராளம். 73 வயதாகும் ரஜினி இப்போதும் ஒரு டாப் ஹீரோவாகவே கோலிவுட்டில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: நான் அப்படி நடிப்பேன்னு யாரும் நம்பல!.. ஒருத்தர தவிர!.. விஜயகாந்த் சொன்னது யாரை தெரியுமா?…

வயதான தோற்றமும் இல்லாமல் இன்னும் அதே வேகத்துடன் சுறுசுறுப்பாக இருப்பதும் நடப்பதும் பார்க்கிறவர்களை ஆச்சரியப்பட வைக்கிறது. 80களில் ரஜினியின் ஆதிக்கம்தான் அதிகமாக இருந்தது. அந்த கால நடிகைகளில் ரஜினியுடன் நடிக்காத நடிகைகளே இருக்க மாட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

padi

padi

ரஜினிக்கு  ப்ளஸாக இருப்பதே அவருடைய ஸ்டைல்தான். அந்த ஸ்டைலை இன்று வரை பின்பற்றி வருகிறார். இந்த நிலையில் படிக்காதவன் படத்தில் குட்டி ரஜினியாக நடித்தவர் மாஸ்டர் சுரேஷ். அச்சு அசலாக ரஜினியின் ஸ்டைலை நடித்து காட்டி அசத்தியிருப்பார்.

இதையும் படிங்க: எல்லா மாமியாரும் ஒன்னுதானே! ஜோதிகா மும்பை போறேனு சொன்னதும் சூர்யாவின் அம்மா ரியாக்‌ஷன்

உண்மையிலேயே ரஜினி குட்டியாக இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பாரோ என்ற வகையில் மாஸ்டர் சுரேஷின் நடிப்பு இருந்தது. கிட்டத்தட்ட அந்தப் படம் வெளியாகி 39 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதில் குட்டி ரஜினியாக நடித்த மாஸ்டர் சுரேஷின் தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதுவும் பிரபல சீரியல் நடிகையான பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதாவின் உடன் பிறந்த சகோதரர்தான் அந்த குட்டி ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top