இப்படி ஒரு காரணத்துக்காகவா பத்மினி எம்.ஜி.ஆர் படத்தையே உதறித்தள்ளுனாரு?? என்னப்பா சொல்றீங்க!!
1956 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், பானுமதி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “தாய்க்குப்பின் தாரம்”. இத்திரைப்படத்தை எம்.ஏ.திருமுகம் இயற்றியிருந்தார். சாண்டோ சின்னப்பா தேவர் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
இத்திரைப்படம் உருவாவதற்கு முன்பு இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பத்மினியை நடிக்க வைக்கலாம் என முடிவெடுத்திருந்தாராம் சின்னப்பா தேவர். அதன்படி பத்மினியை ஒப்பந்தம் செய்ய அவரை அணுகினார். மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடைபெறுவதாகவும் இருந்தது.
பத்மினி அப்போது பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகியிருந்தார். குறிப்பாக அத்திரைப்படங்களின் படப்பிடிப்பு முழுவதும் சென்னையிலேயே இருந்தது. ஆதலால் கோவையில் தங்கி படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாது என்ற காரணத்தால் தனக்கு வந்த எம்.ஜி.ஆர் பட வாய்ப்பை நிராகரித்துவிட்டாராம் பத்மினி.
பத்மினி மறுப்புத் தெரிவித்த நிலையில் சின்னப்பா தேவர் கதாநாயகிக்கான தேடலில் இறங்கினாராம். அப்போதுதான் எம்.ஜி.ஆர், “பானுமதியை நடிக்க வைக்கலாம், நான் பேசிப்பார்க்கிறேன்” என கூறினாராம்.
அந்த காலகட்டத்தில் பானுமதியை ஒப்பந்தம் செய்வது என்பது சாதாரண விஷயம் இல்லையாம். தென்னிந்தியாவின் டாப் நடிகையாக திகழ்ந்தாராம் பானுமதி. ஆனால் எம்.ஜி.ஆரே கேட்டுக்கொண்டதன் காரணமாக “தாய்க்குப்பின் தாரம்” திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் பானுமதி.
ஆனால் சின்னப்பா தேவருக்கு அதில் ஒரு சந்தேகம் வந்ததாம். கோவையில் படப்பிடிப்பு என்றவுடன் எப்படி பத்மினி மறுத்தாரோ அது போல் பானுமதியும் மறுத்துவிடுவாரோ என்று ஐயப்பட்டராம். ஆதலால் நேராக பானுமதியிடம் சென்ற சின்னாப்பா தேவர் “யம்மா, படப்பிடிப்பு முழுவதும் கோவைலதான் நடக்குது. உனக்கு அதில் சம்மதம்தானே” என கேட்டாராம்.
அதற்கு பானுமதி “எம்.ஜி.ஆரே கோயம்பத்தூருக்கு வந்து நடிக்கும்போது நான் நடிக்க மாட்டேனா என்ன?” என்று கூறினாராம். இவ்வாறுதான் “தாய்க்குப்பின் தாரம்” திரைப்படத்தில் பானுமதி கதாநாயகியாக ஒப்பந்தமானார்.