கார்த்தி நடித்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை நேக்காக கவ்விக்கொண்டு போன ஆர்யா… கடைசில இப்படி ஆகிடுச்சே!!
கடந்த 2010 ஆம் ஆண்டு கார்த்தி, தமன்னா ஆகியோரின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் “பையா”. இத்திரைப்படத்தை லிங்குசாமி தயாரித்து இயக்கியிருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
“பையா” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது “பையா 2” திரைப்படம் உருவாகவுள்ளதாக ஒரு சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளது.
“பையா 2” திரைப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் பாலிவுட்டில் மிகப் பிரபலமாக திகழ்ந்து வரும் நடிகையும் ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூரை இத்திரைப்படத்தில் நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“பையா” திரைப்படத்தின் கதைப்படி கார்த்தியும் தமன்னாவும் பெங்களுரிலிருந்து மும்பை போகும் சாலையில் பயணம் மேற்கொள்வதை அம்சமாக கொண்டு திரைக்கதை பிண்ணப்பட்டிருந்தது. இந்த நிலையில் “பையா 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க துபாயில் நடைபெறவுள்ளதாம். மேலும் அங்குள்ள ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு கதாநாயகர்கள் பயணப்படுவது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.
லிங்குசாமி இதற்கு முன்பு ஆர்யாவை வைத்து “வேட்டை” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இத்திரைப்படத்தை தொடர்ந்து லிங்குசாமி, ஆர்யாவை வைத்து “பையா 2” திரைப்படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வலைப்பேச்சு பிஸ்மியை கட்டம் கட்டி தூக்க பிளான் போட்ட சேரன்… அப்படி என்னதான்ப்பா பிரச்சனை?…