அப்பவே பேன் இந்திய படம் எடுத்த கமல்… இதுக்கும் பிள்ளையார் சுழி போட்டது இவர்தானா??

Kamal Haasan
சமீப காலத்தில் பேன் இந்திய திரைப்படம் என்பது மிகவும் சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. “2.0”, “கே ஜி எஃப்”, “சாஹோ’, “பொன்னியின் செல்வன்”, “RRR”, “ஆதிபுருஷ்” என தொடர்ந்து பல பேன் இந்தியா திரைப்படங்களின் வருகையை நாம் பார்த்து வருகிறோம். ஆனால் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பே பேன் இந்தியா திரைப்படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார் கமல்ஹாசன்.

Kamal Haasan
படத்தொகுப்பில் புரட்சி
1994 ஆம் ஆண்டு கமல்ஹாசன், சுகன்யா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “மகாநதி”. இத்திரைப்படத்தை சந்தான பாரதி இயக்கியிருந்தார்.

Mahanadhi
இத்திரைப்படம் வெளிவந்தபோது பொருளாதார ரீதியாக கைக்கொடுக்கவில்லை என்றாலும் காலம் கடந்து நிறுகும் கிளாசிக் திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்தது. இத்திரைப்படத்தினுடைய சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்தியாவிலேயே “Avid” தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படத்தொகுப்பு செய்த முதல் படம் இதுவே ஆகும்.
சப்தத்தில் புரட்சி
1995 ஆம் ஆண்டு கமல்ஹாசன், அர்ஜூன், கௌதமி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “குருதிப் புனல்”. இத்திரைப்படத்தை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீதர் இயக்கியிருந்தார்.

Kuruthi Punal
“குருதிப் புனல்” திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படமாக இத்திரைப்படம் இன்று வரை சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இத்திரைப்படத்தினுடைய சிறப்பம்சம் என்னவென்றால், இந்தியாவிலேயே “Dolby Stereo” சப்தத்தில் வெளியான முதல் திரைப்படம் இதுவே ஆகும்.
ஆரோ 3டி
கடந்த 2013 ஆம் ஆண்டு கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜா குமார் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “விஸ்வரூபம்”. இத்திரைப்படத்தை கமல்ஹாசன் இயக்கியிருந்தார்.

Vishwaroopam
இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்தது. இந்தியாவிலேயே “ஆரோ 3டி” என்ற ஒலி வடிவமைப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் இதுவே ஆகும்.
பேன் இந்தியா
இவ்வாறு பலவற்றிற்கும் பிள்ளையார் சுழி போட்டு வைத்த கமல்ஹாசன், பேன் இந்தியா என்ற கான்செப்ட்டிற்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே பிள்ளையர் சுழி போட்டிருக்கிறார்.

Vikram
கமல்ஹாசன் நடிப்பில் 1986 ஆம் ஆண்டு வெளியான “விக்ரம்” திரைப்படத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நடிகர்களை கமல்ஹாசன் நடிக்க வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: ஸ்ட்ரைக்கால் தள்ளிப்போன விஜய் பட ஷூட்டிங்… தடைகளை தாண்டி ஹிட் அடித்த படத்தின் சுவாரஸ்ய பின்னணி…

Amjad khan
அதாவது இதில் சலோமியா நாட்டின் ராஜாவாக நடித்த அம்ஜத் கான், ஹிந்தியை சேர்ந்த மிகப்பிரபலமான நடிகர்.

Lissy
அதே போல் இதில் பிரீத்தி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த லிஸ்ஸி மலையாள சினிமாவை சேர்ந்தவர்.

Dimple Kapadia
மேலும் இனிமாசி என்ற இளவரசியாக நடித்த டிம்பிள் கபாடியா பாலிவுட்டில் பிரபல கதாநாயகியாக திகழ்ந்தவர். இவ்வாறு அப்போதே பேன் இந்திய படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் கமல்ஹாசன்.