எம்.எஸ்.வி மீது ஏற்பட்ட கோபம்!.. இளையராஜாவை கொண்டு வந்த தயாரிப்பாளர்!. இவ்வளவு நடந்திருக்கா!..
80களில் இசைஞானி இளையராஜா எப்படி தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக அப்படி 60களில் இருந்தவர்தான் எம்.எஸ்.விஸ்வநாதன். அப்போது வெளிவந்த 90 சதவீத படங்களுக்கு இசையமைத்தவர் அவர்தான். குறிப்பாக எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என அப்போது முக்கிய நடிகர்களாக இருந்த மூவரின் படங்களுக்கும் இசையமைத்தவர் அவர்தான்.
பல இனிமையான பாடல்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இவரை மெல்லிசை மன்னர் எனவும் திரையுலகில் அழைத்தார்கள். மிகவும் சாந்தமான சுபாவம் கொண்டவர். யாரிடமும் கோபப்பட மாட்டார். மிகவும் அமைதியானவர். எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் மறக்க முடியாத பல பாடல்களை கொடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: தமிழை ஏன்டா கொல்றீங்க!.. எம்.எஸ்.விஸ்வநாதன் கன்னத்தில் பளார் விட்ட பாடலாசிரியர்!..
இவர் இசையமைத்த பல பாடல்கள் இப்போதும் காற்றில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. எம்.எஸ்.வியின் இசையில் பல பாடல்களை எழுதியவ கவிஞர் கண்ணதாசன். காதல், தத்துவம், சோகம் என பல சூழ்நிலைகளுக்கும் பாடல்களை எழுதியிருக்கிறார். தினமும் அவர் எம்.எஸ்.வியின் இசையில் சில பாடல்களை எழுதும் அளவுக்கு இருவரின் கூட்டணியும் பிரபலமானதோடு அது வெற்றிக்கூட்டணியாகவும் பார்க்கப்பட்டது.
அதேநேரம் கண்ணதாசனுக்கும், எம்.எஸ்.விக்கும் இடையே அடிக்கடி சண்டையும் ஏற்படும். அதன்பின் இருவரும் சமாதானம் செய்து கொள்வார்கள். அப்படி ஒருமுறை கண்ணதாசனோடு அவர் சண்டை போட்டு பேசாமல் இருந்தபோது கண்ணதாசனின் நெருங்கிய உறவினரும், அவரின் உதவியாளர் மற்றும் தயாரிப்பாளருமான பஞ்சு அருணாச்சலத்தின் குடும்பத்தில் ஒரு திருமண விழா நடந்தது.
அந்த விழாவுக்கு இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் இசை நிகழ்ச்சி நடப்பதாக இருந்தது. ஆனால், கண்ணதாசனின் மீது இருந்த கோபத்தில் அங்கே நீ இசை நிகழ்ச்சி நடத்த போகக்கூடாது என எம்.எஸ்.வி சொல்லிவிட்டதாக வெளியான செய்து பஞ்சு அருணாச்சலத்திற்கு கோபத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: அந்த பாட்டை நான் பாட மாட்டேன்!.. எம்.எஸ்.வியிடம் கறாராக சொன்ன டி.எம்.எஸ்!… காரணம் இதுதான்!..
எனவே, அவர் கதை, வசனம் எழுதி சில படங்களுக்கு கன்னடத்தில் இருந்து விஜய பாஸ்கர் என்கிற இசையமைப்பாளரை கொண்டு வந்தார் பஞ்சு அருணாச்சலம். அந்த விஜய பாஸ்கர்தான் பஞ்சு அருணாச்சலம் கதை, வசனம் எழுதிய பல படங்களுக்கும் இசையமைத்தார். அதேபோல், எம்.எஸ்.வி-யின் மீது இருந்த கோபம் காரணமாகவே பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவையும் அன்னக்கிளி படத்தில் அறிமுகம் செய்து வைத்தார். இளையராஜாவின் கிராமத்திய இசையின் முன் எம்.எஸ்.வியின் மெல்லிசை சற்று தொய்வடைந்து போனது குறிப்பிடத்தக்கது.
இதேபோல்தான் பின்னாளில் இளையராஜாவின் மீது இருந்த கோபத்தில் இயக்குனர் கே. பாலச்சந்தர் ஏ.ஆர்.ரஹ்மானை தான் தயாரித்த ரோஜா படம் மூலம் அறிமுகம் செய்து வைத்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: எம்.எஸ்.வி போட்ட டியூனுக்கு கண்ணதாசன் சிரமப்பட்டு எழுதிய பாடல்… விடிய விடிய விழித்த பாலசந்தர்