Connect with us

‘வாரிசு’ படத்தில் அவமானப்படுத்தப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்…! விஜய்க்கு தெரியாமல் படக்குழு செய்த சதி…

vijay_main_cine

Cinema News

‘வாரிசு’ படத்தில் அவமானப்படுத்தப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்…! விஜய்க்கு தெரியாமல் படக்குழு செய்த சதி…

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் சென்னை மற்றும் ஆந்திர பிரதேசத்தில் நடந்து வருகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார்.

vijay1_cine

மேலும் விஜயுடன் சேர்ந்து சரத்குமார், பிரகாஷ் ராஜ், சங்கீதா, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடிக்கின்றனர். படத்திற்கான நட்சத்திர தேடல்களே நீண்ட நாள்களுக்கு பிறகு வெற்றியடைந்தது. கமெர்ஷியல் குடும்ப படமாக அமைய இருப்பதால் விஜய் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்கள் : விஜய் எங்கேயொ போயிட்டாரு…! அட நீங்க வேற …விஜய்க்காக காத்துக் கொண்டிருக்கும் ஹிட் இயக்குனர்..

vijay2_cine

படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் என் தப்பு எதுவுமில்லாமல் என்னை அவமானப்படுத்தி வெளியில் அனுப்பி விட்டார்கள் என பிரபல சின்னத்திரை நடிகர் தெரிவித்துள்ளார். அவர் வேறு யாருமில்லை. விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸில் மீனாவுக்கு அப்பாவாக நடித்துக் கொண்டிருக்கும் ரவிச்சந்திரன் தான். இவர் ஏற்கெனவே சண்டைக்கோழி, மெட்ராஸ் போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.

vijay3_cine

அவரை போனில் அழைத்து போட்டோ சூட் எல்லாம் அனுப்ப சொல்லி அது ஓகே ஆனதும் நேராக சூட்டிங்கிற்கு வந்து விடுங்கள் என கூறி மேக்கப் டிரஸ் எல்லாம் அணியச்சொல்லி இயக்குனர் முன்னாடி போய் நிற்க அவர் ரவிச்சந்திரனை மேலிருந்து கீழ் வரை பார்த்து போய் கேரவனில் உட்கார சொல் என கூறினாராம்.

இதையும் படிங்கள் : விஜய் டிவி பிரபலத்துக்கிடையே நடந்த பனிப்போர்..! மன உளைச்சலில் காமெடி ஆக்டர்..

vijay4_cine

இவரும் கேரவனில் காத்திருக்க மேனேஜர் வந்து நீங்கள் இந்த படத்தில் இல்லை என சொல்லிவிட்டார்கள் என கூற ஆத்திரம் தாங்காமல் நான் நன்றாக நடிக்கவில்லை , வசனம் சரியாக கூற வில்லை என சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. வரவழைத்து இப்படி அசிங்கப்படுத்தி விட்டீர்கள் என கூறி நான் நேராக ஹீரோவிடம் போய் முறையிடுகிறேன் என சொன்னாராம். மேனேஜர் சார் வேண்டாம். அது பெரிய பிரச்சினை ஆகிவிடும் என கூறி ஒரு நாள் சம்பளத்தை மேனேஜரே கொடுத்து அனுப்பி வைத்தாராம். ஆனால் இது விஜய் சார்க்கு தெரிஞ்சா இப்படி விட்டிருக்க மாட்டார் என ரவிச்சந்திரன் கூறினார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top