காதல் பிரச்னையில் அரசிக்காக குமரவேலுவை கும்மிய பாண்டியன் பிள்ளைகள்…

by Akhilan |
காதல் பிரச்னையில் அரசிக்காக குமரவேலுவை கும்மிய பாண்டியன் பிள்ளைகள்…
X

Pandian Stores2

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலின் இன்றைய எபிசோட்டின் தொகுப்புகள்.

அரசி காதலால் கடுப்பான கோமதி ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் நீ நல்லாவே இருக்க மாட்ட என சபிக்கிறார். இதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியாகி அதெல்லாம் சொல்லாதீங்க என கோமதியை தடுக்கின்றனர்.

கோமதி பாண்டியனிடம் சென்று அழுதுக்கொண்டே பேசுகிறார். அரசியை மீண்டும் திட்டி தீர்க்கிறார். பழனி இதை தாங்க முடியாமல் நேராக சக்திவேல் வீட்டிற்கு சென்று குமரவேலை கடுமையாக திட்டிவிடுகிறார். இதை பார்த்து அங்கிருந்த குடும்பத்தினர் அதிர்ச்சியாக நிற்கின்றனர்.

Pandian Stores2

அரசி காதலை கேட்க அவர்களுக்கே ஷாக்காக அந்த நேரத்தில் அங்க வரும் செந்தில் மற்றும் கதிர் வந்து குமரவேலை அடி துவைத்து விடுகின்றனர். சக்திவேலை நடுவில் யார் வீட்டுக்கு வந்து அடிச்சிட்டு இருக்கீங்க என சத்தம் போடுகிறார்.

எங்க குடும்பத்தை பழி வாங்க தான் இப்படி பண்ணிட்டு இருக்கீயா என கதிர் மற்றும் செந்தில் பிரச்னை செய்கின்றனர். வீட்டிற்கு வர அரசியிடம் கேட்க அவர் அழுதுக்கொண்டு இருக்கிறார். ஒரு கட்டத்தில் பாண்டியனிடம் சென்று மன்னிப்பு கேட்கிறார்.

ஆனால் பாண்டியன் பேசாமல் இடிந்து போய் அமர்ந்து இருக்கிறார். கோமதி அழுதுக்கொண்டே இருக்கிறார். இதில் இனி அரசி என்ன செய்வார்? திருமணம் செய்து இன்னும் குடும்பத்தினை அவமான செய்ய போகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Next Story