வீட்டுக்கு வந்த பாண்டியனை பார்த்து அதிர்ந்த கோமதி.. அடுத்த கதைக்களம் இதுதானா?

pandian stores2
Pandian stores2: இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ்2 எபிசோட்டில் ஒளிபரப்பாக இருக்கும் கதைக்குறித்த தொகுப்புகள்.
பிள்ளைகள் பாண்டியனை அழைத்து வர சரவணன் பதறி கேட்கிறார். பின்னர் பழனி பாண்டியனை உள்ளே அழைத்து போக சொல்கிறார். கோமதி பாண்டியன் வரும் கோலம் பார்த்து அதிர்ந்து விடுகிறார். மருமகள்களும் அவர் தலைதாழ்ந்து வருவதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.
கோமதி கதறி அழுகிறார். மீனா என்ன மாமா இப்படி பண்ணிட்டீங்க. நாங்க பயந்துட்டோம் என்கிறார். பழனி பாண்டியன் இருந்த இடம் குறித்து சொல்லாமல் கடையில் இருந்ததாக சொல்லி சமாளிக்கிறார். கோமதியை சமாதானம் செய்து தூங்க வைக்கின்றனர்.
முத்துவேல் வீட்டில் எல்லாரும் சாப்பிட உட்காருகின்றனர். அப்பத்தா நடந்த விஷயம் குறித்து கவலையாக பேசுகிறார். குமரவேல் எதுவும் நடக்காமல் சாப்பிட போக அவர் அம்மா கடுப்பாகி அடிக்கிறார். இதில் சக்திவேல் எதுக்கு பிள்ளையை அடிக்கிற என்கிறார்.
பாண்டியன் இப்போ கூனி குறுகி நின்றத பத்தி பேசுறீங்க. நாங்க இரண்டு முறை அப்படி நின்னு இருக்கோம் எனக் கூற அப்பத்தா பழி வாங்க நினைக்காத. பெண் பாவம் சும்மா விடாது என்கிறார். சக்திவேல் அதெல்லாம் தெரியாது. அதுவா நடக்குது. எதிரிக்கு கெட்டது நடக்கும் போது சந்தோஷப்படுவதாக சொல்கிறார்.

pandian stores2
வெற்றிவேல் பாண்டியனுக்கு வந்த விஷயம் நம்மளால் நடந்தது எனக் கூறி சக்திவேல் இதுக்கு முன்னாடி நம்ம செஞ்சதே இல்லையா என்கிறார். அதெல்லாம் சரிதான். ஆனா பெண் விஷயத்தில் செய்றது சரியில்லை. குமார் செஞ்சது ரொம்பவே கேவலமான விஷயம் என்கிறார்.
இதில் கடுப்பாகும் சக்திவேல் திட்டி விட்டு எழுந்து செல்கிறார். கோமதி வீட்டில் கதிர் பாண்டியன் படுத்து இருந்த விஷயத்தை சொல்லி கவலையாக பேசுகிறார். சரவணன் குமார் மேல் கோவப்பட செந்தில் திடீரென அவன் இப்படி செய்வது என்னவா இருக்கும் எனப் பேசுகின்றனர்.
பழனி ஒண்டிக்கு ஒண்டி நின்னா காப்பாத்த முடியாது என்பதால் இதை செய்தான் எனக் கூறுகின்றனர். அரசி வாழ்க்கையை காப்பாத்தியாச்சு என ஓரளவுக்கு நிம்மதி அடைகின்றனர். அப்போ பாண்டியன் மற்றும் கோமதி வர அவர்கள் கிச்சன் செல்கின்றனர்.
அரசி அப்பா என் முகத்தை கூட பார்க்கலை என வருத்தப்படுகிறார். மயிலை வெளியில் அனுப்பிவிட்டு பாண்டியன், கோமதியிடம் அரசி விஷயத்தில் ஒரு முடிவு எடுத்திருப்பதாகவும் அதில் உனக்கு உடன்பாடு இருக்கும் என நம்புவதாகவும் சில விஷயங்களை கூற அதற்கு கோமதி நீங்க சொல்ற முடிவு சம்மதம் என்கிறார்.