வீட்டை விட்டு வெளியேறிய பாண்டியன்… அதிர்ச்சியில் நிற்கும் குடும்பம்… என்ன நடக்க போகுதோ?

Pandian stores2
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை எபிசோட்டில் நடக்க இருக்கும் தொகுப்புகள்.
அப்பத்தா குமரவேலிடம் சத்யம் கேட்க அவர் தயங்கி நிற்கிறார். எல்லாரும் சத்யம் செய்ய சொல்ல சக்திவேலும் கண்ணை காட்டுகிறார். அவர் சத்யம் செய்ய போக அவர் அம்மா நிறுத்தி சக்திவேல் தலையில் சத்யம் பண்ண சொல்கிறார்.
குமரவேல் அதிர உங்க அப்பத்தா, பெரியப்பா மேல பாசம் இருந்தா இதை செய் என்கிறார். குமரவேலும் சக்திவேல் தலையில் சத்யம் செய்கிறார். பாண்டியன் வீட்டில் எல்லாரும் கலங்கி இருக்கின்றனர். அப்போ பாண்டியன் எழுந்து போக வீட்டில் இருப்பவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.
கதிர், செந்தில் ப்ளீஸ் அப்பா என அவரிடம் கெஞ்ச மீனா, மயில் என எல்லாரும் கெஞ்சுகின்றனர். பாண்டியன் யாரும் வர வேண்டாம் எனக் கூறிவிட்டு வெளியில் சென்றுவிடுகிறார். ஒரு கட்டத்தில் பாண்டியன் என்ன மதிச்சீங்கனா யாரும் என் பின்னாடி வரக்கூடாது. என் போக்கில் விடுங்க என்கிறார்.

Pandian stores2
எல்லாரும் அழுதுக்கொண்டு இருக்க பாண்டியன் சென்று விடுகிறார். இதை பார்க்கும் அப்பத்தா வேறு கண்ணீர் சிந்துகிறார். வீட்டிற்குள் வரும் கோமதி, அரசியை மீண்டும் திட்டி தீர்க்கிறார். பாண்டியன் இல்லை என்றால் நான் உயிரோட இருக்க மாட்டேன். நானும் செத்துடுவேன் என்கிறார். குடும்பத்தினர் பதறுகின்றனர்.
மகன்கள் ஆறுதல் சொல்கின்றனர். பாண்டியன் அழுதுக்கொண்டே தன்னுடைய சந்தோஷமான நாட்களை நினைக்கிறார். அரசி செய்ததையும் நினைத்து மழையில் நடந்து கொண்டே செல்கிறார். கோமதி அழுது புலம்பிக்கொண்டு இருக்கிறார். செந்தில் மற்றும் கதிர் பேசிக்கொண்டு இருக்க மீனா போய் பார்த்துட்டு வாங்க என அனுப்புகிறார்.
Also Read: முத்துவை மாட்டிவிட்ட மனோஜ்… கடுப்பான மீனா, ரவி… கொஞ்சம் ஓவருதான்!
அவர்கள் செல்வதை பழனி நிறுத்தி சரவணனை வீட்டில் விட்டு மூவரும் பாண்டியனை தேட செல்கின்றனர். தங்கமயில் சரவணனுக்கு ஆறுதல் சொல்கிறார். அரசிக்கு ராஜீ என்கிட்டையாது சொல்லி இருக்கலாமே எனக் கேட்கிறார்.