ஒருநாளைக்கு இவ்வளவு பணமா.?! வாய்பிளக்க வைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சம்பள விவரம்.!
தற்போதுள்ள தமிழ் டிவி சேனல்களில் முதலிடத்தில் இருப்பது விஜய் டிவி தான். மக்கள் ரசிக்கும்படி, நிகழ்ச்சிகள் நடத்துவதும் சரி, அதே போல மக்கள் ரசிக்கும் படி சீரியல்களும் சரி அவர்கள் டிஆர்பியில் முன்னணியில் இருக்கின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பகும் சீரியலில் பீக் நேரத்தில் ஒளிபரப்பப்படும் சீரியல்களில் முக்கியமானது என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இந்த சீரியல் ரசிகர்கள் ஏராளம். இப்படம் வானத்த போல, ஆனந்தம் பட பாணியில் 4 அண்ணன் தம்பி பற்றிய குடும்ப கதையாக நகர்ந்து வருகிறது.
இதில், வரும் கதாபாத்திரங்களான ஸ்டாலின், சுஜிதா , வெங்கட், குமரன், ஹேமா, காவ்யா, சாய் காயத்ரி, சரவணன் விக்ரம் ஆகியோரை சத்யமூர்த்தி, தனம், ஜீவா, கதிர், மீனா, முல்லை, ஐஸ்வர்யா, கண்ணன் என்றவாரே நமக்கு தெரியும். அவர்களின் சம்பள விவரம் பற்றி நமக்கு தெரியுமா அது பற்றிய தகவல் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்களேன் - பிடிக்காமல்தான் விஜயின் அந்த படத்தை இயக்கினேன்.! ஆனால் படம் தாறுமாறு ஹிட்.!
அதில், சத்யமூர்த்திக்கு 12 ஆயிரம், தனம் 17 ஆயிரம், ஜீவா 10 ஆயிரம் , கதிர் 10 ஆயிரம், மீனா 8 ஆயிரம், முல்லை 8 ஆயிரம், ஐஸ்வர்யா 8 ஆயிரம் , கண்ணன் 6 ஆயிரம் ரூபாய் என ஒருநாள் சம்பளம் வாங்கி வருகின்றனராம்.