‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ல் அந்த நடிகைக்கு வேறொரு பிரச்சினை?.. சக நடிகர் கொடுத்த தடாலடி பேட்டி!..
விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்த சீரியல் ஆரம்பித்ததில் இருந்து டிஆர்பியில் அதற்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த சீரியலில் சமீபகாலமாக பல திருப்பங்கள் நடைபெற்று கொண்டு வருகின்றன.
அண்ணன் தம்பி பாசத்தை அடிப்படையாக கொண்டு ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸில் அண்ணனான ஸ்டாலினும் அண்ணியாக சுஜிதாவும் அற்புதமான நடிப்பை வழங்கி வருகின்றனர். மேலும் தம்பி கதாபாத்திரங்களில் அவரவர் அவர்களுக்கேற்ற நடிப்பை பிரம்மாதமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடைக்குட்டி மருமகளாக வரும் சாய் காயத்ரி இதுவரை நடிப்பில் எந்த குறையும் இல்லாமல் அனைவரிடமும் நல்ல பேரையே வாங்கி வந்தார். இதனிடையில் அந்த தொடரில் இருந்து சாய் காயத்ரி விலகி இருப்பது பலருக்கு அதிர்ச்சியான செய்தியாக இருக்கிறது.
இது பற்றி சாய் காயத்ரியிடம் கேட்டபோது கூட ஒரு கால்பந்து வீரரை கிரிக்கெட் விளையாட சொன்னால் விளையாட முடியுமா? என்று சூசகமாக பதிலளித்தார். அதைப் பற்றி தெளிவாக பதில் கூறியிருக்கிறார் அதே நாடகத்தில் ஜீவா கதாபாத்திரத்திற்கு மாமனராக நடித்திருக்கும் ஜனார்த்தனன்.
சாய்காயத்ரி கூறியிருக்கும் அந்த உவமை ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவில் இல்லை என்றும் ஒரு நடிகர், நடிகை என்றாலே எல்லாவிதமான கதாபாத்திரங்களையும் ஏற்றுத்தான் நடிக்க வேண்டும் என்றும் கூறினார். ஒரு உண்மையான விளையாட்டு வீரரை அவர் சம்பந்தமில்லாத விளையாட்டை விளையாட சொன்னால் தான் தவறு.
ஆனால் ஒரு நடிகர் எந்த விளையாட்டையும் விளையாடலாம். மேலும் இதுவரை பாஸிட்டிவான கேரக்டரில் நடித்த அவரது கதாபாத்திரம் இனிமேல் கொஞ்சம் கோபத்தின் உச்சத்திற்கு செல்லப் போகிறதாம். அதனால் அந்த மாதிரி நடித்தால் உறவினர்கள் என்ன சொல்வார்கள், ரசிகர்கள் திட்டுவார்கள் என்று பயந்தே விலகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இதைப் பற்றி கூறிய ஜனார்த்தனன் ‘இதெல்லாம் பிரச்சினையாக இருக்காது, சாய்காயத்ரி நல்ல நடிகை, அவருக்கு வேறு எதோ பிரச்சினை இருந்திருக்கிறது, அதனால் தான் விலகி விட்டார்’ என்று ஜனார்த்தனன் கூறினார்.
இதையும் படிங்க : ஏற்ற இறக்கத்துடன் பாட பாடகர் எடுத்த முடிவு!.. சிவாஜி படப்பிடிப்பில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..