அரசியின் கல்யாணத்தால் பாண்டியனுக்கு ஏற்பட்ட திடீர் பிரச்னை… இனிமே எப்படி சமாளிப்பாரோ?

by Akhilan |
அரசியின் கல்யாணத்தால் பாண்டியனுக்கு ஏற்பட்ட திடீர் பிரச்னை… இனிமே எப்படி சமாளிப்பாரோ?
X

pandian stores

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.

உமையாள் மாப்பிள்ளையுடன் வந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். கோமதி, பாண்டியனுடன் சரவணன் மட்டுமே அப்போது இருக்கிறார். குழலிக்கு எவ்வளோ நகை போட்டீங்களோ அதையே அரசிக்கு செஞ்சி விடுங்கள் என்கிறார். பாண்டியனும் தயக்கத்துடனே சரியென்கிறார்.

இதை கேட்ட சதீஷ் வரதட்சணை வாங்க தான் என்னை கூப்பிட்டு வந்திருக்கியா எனக் கோபமாக கேட்கிறார். இல்லடா இது கௌரவம் நம்ம தானே பேசிக்கிறோம் என சமாளித்து விடுகிறார். பின்னர் ஒரு காரையும் மாப்பிள்ளைக்கு வாங்கி கொடுக்க சொல்லி விடுகிறார். இதனால் சரவணன் மற்றும் கோமதி அதிர்ச்சி அடைகின்றனர்.

பின்னர் மாப்பிள்ளை சதீஷ் கிளம்பி காரில் செல்லும் போது இப்போ எதுக்கு நீ காரெல்லாம் கேட்ட இது முன்னாடியே தெரிஞ்சி இருந்தா உன்னை வீட்டிலேயே விட்டு வந்திருப்பேன் என்கிறார். பின்னர் உமையாள் நீ வேலைக்குனு வெளிநாடு போய்டுவ நான்தானே எல்லாருக்கும் பதில் சொல்லணும் என வாயை அடைக்கிறார்.

மீனா தன்னுடைய ஆபிஷில் இருக்கிறார். அரசு திட்டம் குறித்து தன்னுடைய அதிகாரிகளை திட்டிக்கொண்டு இருக்கிறார். சக்திவேல் ஆக்கிரமிப்பு கடை குறித்து திட்டுகிறார். உடனே அதை அகற்ற சொல்லி உத்திரவிட்டு இருக்கிறார். மறுபக்கம், கதிர் மற்றும் ராஜி இருவரும் பேசி சிரித்துக்கொண்டு இருக்கின்றனர்.

கதிருக்கு பைக் வாங்குவது குறித்தும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். வீட்டில் இருப்பவர்களிடம் சரவணன் உமையாள் கார் கேட்ட விஷயம் குறித்து சொல்லுகிறார். எல்லாரும் தயங்க மாப்பிள்ளை எதுவும் சொல்லவில்லையா எனக் கேட்க அவருக்கும் புதுசா இருந்து இருக்கும். சத்தம் போட்டாரு என்கிறார். சரவணன்.

பின்னர் பாண்டியன் குடும்பத்தினரை அழைத்து இந்த விஷயம் குறித்து பேச மீனா தன்னுடைய நகையை வச்சு செஞ்சிக்கலாம் என்கிறார். பாண்டியன் அதெல்லாம் வேண்டாம் என்கிறார். தங்கமயில் என்னோட நகையை வச்சிக்கோங்க எனக் கூற மீனா மற்றும் ராஜி அதிர்ச்சியாக பார்க்கின்றனர்.

ராஜி எனக்கும் ஆசை மாமா. ஆனால் என்னிடம் கொடுக்க எதுவும் இல்லை என்கிறார். பின்னர் உங்களுக்கு இருக்க இந்த மனசே போதும். நானே உங்களுக்கு செய்யணும். உங்களிடம் வாங்க கூடாதுமா என மறுத்து விடுகிறார்.

Next Story