மீனாவின் கேள்விக்கு ஷாக் கொடுத்த மாப்பிள்ளை… உண்மை தெரியாமல் பேசும் கோமதி!

by Akhilan |
மீனாவின் கேள்விக்கு ஷாக் கொடுத்த மாப்பிள்ளை… உண்மை தெரியாமல் பேசும் கோமதி!
X

pandian stores

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.

மீனா மாப்பிள்ளையுடன் வர ராசியுடன் வரும் கோமதி அவரை பார்த்து விடுகிறார். பின்னர், உமையாள் வர அவரும் கோமதியிடம் பேசிவிட்டு சாமி கும்பிட செல்கிறார். கோமதி பின்னர் ராஜியிடம் சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

இரண்டு பேரும் சேர்ந்து கல்யாணத்தை நிறுத்த பிளான் போட்டுட்டீங்களா என கேட்கிறார். அதற்காக இல்லை அத்தை என ராஜி சொல்ல வருவதை கேட்காமல் கோமதி பேசிக் கொண்டே இருக்கிறார். இரண்டு பேரும் குடும்பத்தை கலைக்கிறதே வேலையா வச்சிருக்கீங்க என திட்டிக் கொண்டிருக்கிறார்.

ஒரு பக்கம் மீனா சாமி கும்பிட்டு விட்டு மாப்பிள்ளை இடம் தனியாக பேசிக் கொண்டிருக்கிறார். நான் கல்யாண விஷயமாக உங்களை வர சொல்லவில்லை அரசின் படிப்பு விஷயத்தை சொல்வதற்காக தான் வர சொன்னேன் என கூறுகிறார். இதைக் கேட்ட மாப்பிள்ளை எனக்கும் அரசி படிப்பதில் தான் விருப்பம் என்கிறார்.

இதை கேட்டு சந்தோஷப்படும் மீனா நான் பெரிய பிரிப்ரேஷனுடன் வந்தேன். ஆனால் நீங்க ஒத்துக்கிட்டீங்க எனக் கூற மாப்பிள்ளையும் சிரித்து கொள்கிறார். மீனா சந்தோஷத்துடன் வர கோமதி மீண்டும் திட்ட தொடங்குகிறார்.

உங்களை மாதிரி அரசியும் பின்னாடி வருத்தப்பட வேண்டாம் என்பதற்காக அரசியின் படிப்பு விஷயத்தை பேச வந்தேன் என்கிறார். இதை கேட்டு கோமதி மாப்பிள்ளை என்ன சொன்னார் என கேட்க அவருக்கு இதில் முழு சம்மதம் வீட்டில் இருப்பவர்களையும் சம்மதிக்க வைப்பதாக கூறியதாக மீனா கூறுகிறார்.

இருந்தும் கோமதி நீங்க செஞ்சது சரிதான். ஆனால் சொல்லாமல் செஞ்சது தப்பு என்கிறார். மீனா அரசியை எங்க சகோதரியாக நினைச்சு செஞ்சேன். தப்புனா தண்டனை கொடுங்க என கோமதியை பேசி சிரிக்க வைத்து விடுகிறார்.

அந்த நேரம் பார்த்து மாப்பிள்ளை வர அவரிடமும் கோமதி மீனா எதுவும் துடுக்குத்தனமாக செய்திருந்தால் தப்பா எடுத்துக்க வேண்டாம் எனக் கூறுகிறார். ஆனால் மாப்பிள்ளை அரசி படிப்பு விஷயம் குறித்து சரியாக தான் பேசியிருப்பதாக சிரித்து கொண்டே சொல்கிறார்.

பின்னர், கோமதி வீட்டிற்கு உமையாள் மற்றும் மாப்பிள்ளை இருவரும் வருகின்றனர். கல்யாணத்திற்கு 400 பேருக்கு அதிகமாக கூப்பிட வேண்டும் பெரிய மண்டபமாக பார்க்குமாறு கூறுகிறார். இதனால் கோமதி மற்றும் சரவணன் இருவரும் முழித்துக் கொண்டிருக்கின்றனர்.

Next Story