Pandian Stores2: வீட்டிற்குள் நுழைந்த குமரவேல்… ஒரு அடியால் காலி செய்த மீனா… என்ன நடக்க போகுதோ?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.
போட்டி நடைபெறும் இடத்தில் சில ஆண்கள் வந்து ராஜியிடம் டான்ஸ் கிளாஸ் எடுப்பீங்களா எனக் கேட்க மீனாவும், கோமதியும் கலாய்ச்சி திட்டி அனுப்புகின்றனர். ராஜி கதிருக்கு கால் செய்து டான்ஸ் போட்டி குறித்து சொல்லி கொண்டு இருக்கிறார்.
போட்டி இரண்டு சுற்று நடந்து இருப்பதாகவும் அதில் தான் செலக்ட் ஆகி விட்டதாகவும் கூறுகிறார். கோமதி குறித்து கதிர் கேட்க முதலில் அத்தை திட்டியதாகவும் பின்னர் அனுமதி கொடுத்து விட்டதாகவும் சொல்கிறார். ராஜி நான் டான்ஸ் போட்டியில் கலந்து கொண்டது உனக்கு பிரச்சனை இல்லையா என கேட்கிறார்.
உனக்கு திறமை இருக்கு அதனால அதை நீ வெளி காட்டாம இருந்தா தான் தப்பு. வெளிக்காட்டுறதுல தப்பு இல்லை என்கிறார். நீ ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கணும் என கதிர் கூற எனக்கு முதல் பரிசு வேண்டாம் என்கிறார் எனக்கு பர்ஸ்ட் பிரைஸ் வேண்டாம் என்கிறார்.

உடனே ஏன் என கதிர் கேட்க சமாளிக்கிறார் ராஜி. நாளைக்கு நீ வரியா எனக் கேட்க கதிர் முயற்சி செய்து பார்ப்பதாக சொல்லிவிடுகிறார். பின்னர் நால்வரும் சாமி கும்பிட்டு விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றனர். அப்பொழுது அரசிக்கு சதீஷ் கால் செய்கிறார்.
பின்னர் அவர் வாய்ஸ் மெசேஜ் அனுப்ப அதில் நான் சொன்ன விஷயத்திற்கு நீ என்ன முடிவு எடுத்திருக்கிற என கேட்டுக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்கும் அரசி சிரிக்க இந்த நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து ரூமில் பதுங்கி இருக்கிறார் குமார்.
அவருடனே அரசி என அழைத்து நீ அதற்குள் என்னை எப்படி மறந்த. இதை நான் எதிர்பார்த்ததே இல்லை என வர அரசி பயந்து லைட்டை போட குமார் அங்கு நின்று கொண்டிருக்கிறார். உடனே அரசி அவரை வெளியில் போய் விடுங்கள் என கூறுகிறார்.
அவர் உடனே என்னால் உன்னை மறக்க முடியாது. நீ என்னை தான் கல்யாணம் பண்ணிக்கணும் என மிரட்டிக்கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் கோமதி வர கதவை திறக்க முடியாமல் குமார் அவருடைய வாயில் பொத்திக் கொண்டிருக்க அரசி போராடி கதவைத் திறந்து விடுகிறார்.
கோமதி வந்து குமாரிடமிருந்து அரசியை காப்பாற்ற முயல முடியாமல் போக மருமகள்களை அழைக்கிறார். அவர்களும் வந்து குமாரை தள்ளிவிட பார்க்க அவர் எல்லோரையும் தள்ளி விடுகிறார். ஒரு கட்டத்தில் மீனா கடுப்பாகி தோசை கல்லை எடுத்து குமார் தலையில் அடித்து விடுகிறார்.
இதனால் உடனே மயங்கி குமார் கீழே விழுந்து விடுகிறார். கோமதி கோபமாக அரசிடம் நீ தான் இவனை வர சொன்னியா எனக் கேட்க நான் சொல்லவே இல்லை அம்மா என அரசி அழுகிறார். மீனா கோபத்தில் அதற்கெல்லாம் ஆள் இருக்கு எனக் கூறுகிறார். இதற்கிடையில் ராஜி குமாரை எழுப்பி அவர் மூச்சை செக் செய்ய அவர் பேச்சு மூச்சில்லாமல் கிடப்பதாக சொல்ல எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர்.