Pandian Stores2: ராஜியின் நடனத்தால் அதிர்ந்த ஊர்மக்கள்… கடுப்பான கோமதி!

by Akhilan |
Pandian Stores2: ராஜியின் நடனத்தால் அதிர்ந்த ஊர்மக்கள்… கடுப்பான கோமதி!
X

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோடின் தொகுப்புகள்.

ராஜி மேடையில் இருக்க அங்கிருப்பவர்கள் அவரை அவமானப்படுத்தும் வகையில் சத்தம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் கடுப்பாகும் கோமதி உடனே மீனாவிடம் அவருக்கு கீழே வர சொல்லு என சத்தம் போடுகிறார்.

அந்த நேரத்தில் பாட்டை போட அங்கிருந்த இளைஞர்கள் ராஜியை எங்களை பார்த்து நடனமாடு என கேலி செய்து ஆட அவர் அதை பற்றி கவலைப்படாமல் மேடையில் நடனமாட துவங்குகிறார். அதை பார்த்தவர்கள் ஆச்சரியத்துடன் வாய் பிளந்து அமைதியாகி விடுகின்றனர்.

அவர் கீழே வந்ததும் மீனா ராஜியிடம் கை கொடுக்கப் போக கடுப்பான கோமதி அவரை திட்டி வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார். இனிமே நீ டான்ஸ் ஆடுனதெல்லாம் போதும். அவங்களாம் எப்படி நடந்துக்கிட்டாங்க பார்த்தியா இனி இதெல்லாம் வேண்டாம் என்கிறார்.

உடனே, அந்த உதவியாளர் வந்து ராஜியை ஏன் வந்துட்டீங்க எனக் கேட்க நான் எங்க செலக்ட் ஆக போறேன் அதான் என்கிறார் ராஜி. ஆனால் அவரோ யார் சொன்னா நீங்க செலக்ட் ஆகிட்டீங்க அக்கா என்கிறார். உடனே மீனா, ராஜி சந்தோஷப்பட கோமதி வந்து கடுப்படுத்து விட்டு அதெல்லாம் இனி ஆட வேண்டாம் என்கிறார்.

முத்துவேல் சக்திவேல் பேசிக்கொண்டு இருக்க குமார் ஒரு லெட்டருடன் வர அவர் என்னவென்று கேட்கிறார். அதை கொடுக்க அவர் அதிர்ச்சியாகிறார். கொடவுனுக்கு பின்னால் இருக்கும் கட்டடத்தில் ஒரு மாடிக்கு மூணு மாடி கட்டியதால் இடிக்க சொல்லி இருப்பதாக லெட்டர் அனுப்பி இருக்கா பாண்டியன் மருமகள் என்கிறார்.

உடனே முத்துவேல் நீ போய் எதுவும் சத்தம் போட வேண்டாம். இந்த விஷயத்தை வேற மாதிரி பார்க்கலாம் என முத்துவேல் எழுந்து செல்ல சக்திவேல் ராஜி கல்யாணம் ஆகி சென்றதில் இருந்து இவர் சரியே இல்லை. இதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறார் அவர்.

ராஜி கண்டிப்பா டான்ஸ் ஆடி கதிருக்கு பைக்கை வாங்கி கொடுக்க வேண்டும் என்கிறார். அந்த நேரத்தில் அரசி வந்து சதீஷிடம் இருந்து வந்த வாய்ஸ் மெசேஜை கொடுக்கிறார். அதை மீனா கேட்கிறார்.

என்ன மன்னிச்சிடு அரசி. நீ அந்த விஷயத்தை சொன்னபோது நான் ஏதாவது பதில் சொல்லி இருக்கணும். அப்படியே இருந்து வந்தது நிச்சயமா தப்பான விஷயம். எனக்கும் கல்யாணத்துக்கு முன்னாடி கிரஷ் இருக்கு. உனக்கு காதல் இருந்ததில்லை தப்பு இல்லை.

அதை மறைக்காமல் என்கிட்ட சொன்ன உன் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. நீ சொல்றப்பயே கல்யாணம் பண்ணிக்கலாம். இப்ப என்றாலும் சரி. இல்ல வேண்டாம் என்றாலும் சரி என பேசுகிறார்.

Next Story