Pandian Stores2: அரசிக்காக வந்திறங்கிய குமரவேல்… கல்யாணம் நடக்குமா? 

by Akhilan |
Pandian Stores2: அரசிக்காக வந்திறங்கிய குமரவேல்… கல்யாணம் நடக்குமா? 
X

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.

அரசியிடம் சதீஷ் உன்மேல எந்த தப்பும் இல்லை. எனக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதம் எனக்கு ஒரு இதை கேட்கும் ராஜி மற்றும் மீனா அவருடைய நேர்மையான பேச்சை குறித்து சந்தோஷப்படுகின்றனர். ராஜியும் அமைதியாக இருக்கிறார்.

பின்னர் ராஜி சதீஷின் ஆடியோ ரெக்கார்டிங் கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் வீட்டின் உதவியாளர் வந்து ராஜியை டான்ஸுக்கு நேரமாகிவிட்டதாக அழைக்க அவர் அத்தை போக கூடாதுனு சொல்லி இருக்காங்களே அக்கா.

இப்போ நீ அவங்க கிட்ட அனுமதி கேட்க வேணாம். நீ டான்ஸ் ஆடு போ. அவங்களை நான் பார்த்துக்கிறேன் என அரசியுடன் ராஜியை அனுப்புகிறார். மீனா தூங்கிக்கொண்டு இருக்க ரூமில் இருக்கும் மீனாவை கேட்க அவர் டான்ஸ் ஆட சென்றதை உளறிவிடுகிறார்.

கடுப்பான கோமதி அவ தோத்து போனா எதுக்கு ஆடப்போணும் எனக் கூறி மீனாவை அழைத்துக்கொண்டு டான்ஸ் ஆடும் இடத்துக்கு செல்கிறார். கோமதி ராஜியை திட்டிக்கொண்டு இருக்க அதற்குள் பாட்டு போட்டு அவர் ஆட தொடங்கிறார்.

எல்லாரும் அவர் ஆடுவதை ஆவென பார்க்க கோமதியும் மருமகளை மெச்சிக்கொள்கிறார். ராஜியின் நடனத்துக்கு பெரிய கைத்தட்டல் வருகிறது. அரசியை காண அம்பாசமுத்திரத்துக்கே வந்து இறங்கிறார் குமரவேல். அங்கிருப்பவர்களிடம் அட்ரஸ் கேட்க அவர்களும் சொல்லிவிடுகின்றனர்.

ராஜி கடைசி சுற்றுக்கு செலக்ட் செய்யப்பட்டு விடுகிறார். கோமதி பெருமையாக தன்னுடைய மருமகள் எனக் கூறிக்கொள்கிறார். மீனா அவரை கிண்டல் செய்கிறார். ராஜி எப்படியாவது பைக்கை ஜெயிச்சு விடவேண்டும் என நினைக்க கோமதி கார் அல்லது நகையை ஜெயிச்சிரு எனக் கூற ராஜி சோகமாக பார்த்து கொண்டு இருக்கிறார்.

Next Story