Pandian Stores2: குமரவேலை கொன்ற மீனா… துணைக்கு வரப்போகும் கணவர்கள்… பரபரப்பாகும் சீரியல்!

by Akhilan |
Pandian Stores2: குமரவேலை கொன்ற மீனா… துணைக்கு வரப்போகும் கணவர்கள்… பரபரப்பாகும் சீரியல்!
X

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் இன்று நடக்க இருக்கும் பரபரப்பான எபிசோடு குறித்த தொகுப்புகள்.

அரசியை வலுக்கட்டாயம் செய்து கொண்டிருக்கும் குமரவேலை தோசை கல்லால் அடித்து விடுகிறார் மீனா. இதனால் அவர் பேச்சு மூச்சு இல்லாமல் கீழே விழுந்து கிடக்கிறார். ராஜி மற்றும் கோமதி அவரை எழுப்ப முயற்சி செய்கின்றனர்.

ஒரு கட்டத்தில் கோமதி ஏன் மீனா இப்படி குமரவேலை கொன்னுட்ட எனக் கேட்க அவர் அதிர்ந்து நிற்கிறார். கதறி அழுக நான் வேணும்னே செய்யலை அத்தை. நான் சத்தியமா செய்யவே இல்லை என்கிறார். உடனே அரசி என்னால் தானே உங்களுக்கு இவ்வளோ கஷ்டம் என்கிறார்.

ராஜி அழுது கொண்டிருக்க அவரைப் பார்க்கும் மீனா ஒரு கரப்பான் பூச்சியை கொல்ல கூட நான் 100 முறை யோசிப்பேன். கண்டிப்பாக நான் வேண்டும் என இதை செய்யவில்லை என அழுது கொண்டே சொல்கிறார். ஒரு கட்டத்தில் மீனா நானே போலீசுக்கு கால் பண்ணுகிறேன் என மொபைலை எடுக்கிறார்.

இதனால் பதறி அடித்து கோமதி மற்றும் ராஜி இருவரும் அவரை சமாதானம் செய்கின்றனர். ஒரு கட்டத்தில் ராஜி கதிருக்கு கால் செய்து அழுது கொண்டே வீட்டில் நடந்த விஷயங்களை கூறுகிறார். நான் யாருக்காக சமாதானம் சொல்ல வேண்டும் என எனக்கு புரியவில்லை.

என தான் இருந்தாலும் குமரவேல் எனக்கு அண்ணன். ஒரு பக்கம் அத்தை அழுகிறார்கள். இன்னொரு பக்கம் மீனா அக்கா தான் செய்தது தவறு என நினைத்து போலீஸுக்கு போவதாக சொல்ல கதிர் பதறாம இருங்க. நான் உடனே கிளம்பி வரேன் என்கிறார்.

இன்னொரு பக்கம் மீனா கால் செய்து செந்திலிடம் நான் ஒரு கொலை செய்துவிட்டேன் என அழுதுக்கிட்டே சொல்ல முதலில் நம்பாமல் இருக்கிறார். பின்னர் அவர் அழுவதால் தீவிரம் புரிந்து யாரை கொன்னுட்ட எனக் கேட்க அந்த குமாரை என்கிறார்.

Next Story