Pandian Stores2: மீனாவை லஞ்ச வழக்கில் சிக்க வைத்த சக்திவேல்… எப்படி தப்பிக்க போகிறார்?

pandian stores2
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.
சக்திவேல் மற்றும் குமார் இருவரும் தனியாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அரசு வேலை இருப்பதால்தான் மீனா தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறாள். அதனால் அவளை ஒரு வழக்கில் மாட்டி விட்டாள் நம்ம பக்கம் திரும்ப மாட்டார்.
மருமக பிரச்சனையால் பாண்டியனும் அவமானப்படுவான் என சக்திவேல் கூறிக் கொண்டிருக்கிறார். குமார் இந்த திட்டம் நடக்குமா என கேட்க நடந்து தான் ஆகணும் என்கிறார். ஒரு ஆளை தயார் செய்து அவரை லஞ்சம் கொடுக்க மீனா அலுவலகம் போகுமாறு சக்திவேல் ஏற்பாடு செய்கிறார்.
அவரும் தான் இந்த வேலையை கச்சிதமாக முடித்துக் கொடுப்பதாக கூறுகிறார். லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கால் செய்து மீனா குறித்து புகாரையும் தெரிவித்து விடுகிறார். மறுபக்கம் தங்கமயில் தன்னுடைய அம்மாவுக்கு கால் செய்து சரவணன் மீண்டும் சர்டிபிகேட் விஷயம் குறித்து பேசியதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.
உடனே தங்கமயில் அம்மா இது குறித்த தனக்கு ஏதும் தெரியாது. அப்பாவிடம் பேசிக் கொள்ளுங்கள் என கூறிவிடு என்கிறார். இதைத்தொடர்ந்து இந்த பிரச்சனைக்கெல்லாம் ஒரே தீர்வு உடனே குழந்தை பெத்துக்க வேண்டும் என்பதுதான் என்கிறார். இப்ப இருக்க பிரச்னைக்கு இதுதான் முடிவு என அவர் கூறி மயில் திட்டிவிட்டு போனை வைக்கிறார்.
மீனாவை பார்க்க வரும் சக்திவேல் ஆள் வந்து நைசாக பேசிக்கொண்டு இருக்கிறார். பணம் வேண்டும் என்றால் கேளுங்க எனக் கேட்க மீனா அதெல்லாம் குற்றம். எங்க வேலையை நாங்க பார்க்கிறோம் எனச் சொல்லி அவர் மனுவை கேட்க தொடர்ந்து அதிகாரிகள் வருவதற்காக பேச்சை இழுத்துக்கொண்டே இருக்கிறார்.

ஆனால் மீனா ரசீதை கேட்க அவர் பணத்துடன் அதை கொடுக்க மீனாவும் தெரியாமல் அதை பிரிக்க பணம் நோட்டில் விழுகிறது. என்னங்க இது என மீனா கேட்க அந்த நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சரியாக வந்து விடுகின்றனர். இந்த நேரத்தில் சக்திவேல் ஏற்பாட்டில் மீடியா ஆள்களும் வந்து விடுகின்றனர்.
சக்திவேல் ஆள் வைத்து அதிகாரிகளை லஞ்சம் வாங்க மீனா தூண்டியதாக பேச வைக்கிறார். அந்த நேரத்தில் சக்திவேலும் உள்ளே வந்து அவரிடமும் காசு கேட்பதாக சொல்கிறார். இதனால் அதிகாரிகள் மேலும் மீனா மீது சந்தேகம் வலுப்பதாக இருக்கின்றனர். சக்திவேல், குமாரவேல் திமிராக பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
மயிலின் அம்மா கால் செய்து மீனா குறித்து ரொம்ப பெருமையா பேசுவாங்களே எனக் கேட்க ஆமா அதானே உண்மை என்கிறார் மயில். மீனா லஞ்சம் வாங்கியதால் கைது செய்ய போவதாக விஷயம் வந்ததாக சொல்ல மயில் அதிர்ச்சி அடைகிறார். இதனால் மயில் ஓடி சென்று டிவியை ஆன் செய்ய கோமதியும் ஷாக்காகி வருகிறார்.