Pandian Stores2: சக்திவேலை மிரள விட்ட மீனா… சரவணனிடம் வகையாக சிக்கிய தங்கமயில்.. போச்சா?

by Akhilan |
Pandian Stores2: சக்திவேலை மிரள விட்ட மீனா… சரவணனிடம் வகையாக சிக்கிய தங்கமயில்.. போச்சா?
X

pandian store2

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.

சக்திவேல் உரக்கடை அரசாங்க நிலத்தில் கட்டியிருப்பதாக கூறி மீனா இடிக்க தன்னுடைய அதிகாரிகளுடன் வந்திருக்கிறார். இடையில் வரும் சக்திவேல் அதை செய்ய விடாமல் அவரை தடுத்துக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் எம்எல்ஏவுக்கு கால் செய்து மீனாவை மிரட்ட பார்க்கிறார்.

ஆனால் எம்.எல்.ஏ ஊரில் இல்லாமல் போக அவருடைய ஆட்களும் எதுவும் செய்ய முடியாது என கைவிரித்து விடுகின்றனர். மீனா தகவல் சொல்லி போலீஸ் வர அவரிடம் அரசாங்க விவகாரங்களை கூறிக் கொண்டிருக்கிறார். இதனால் போலீசாராலும் எதுவும் செய்ய முடியாமல் போகிறது.

ஒரு கட்டத்தில் போலீஸ் சக்தி வேலை பிடித்துக் கொள்ள அவருடைய கடை மொத்தமாக இடிக்கப்பட்டு விடுகிறது. இதில் அவர் ஆத்திரமாக இருக்கிறார். பின்னர் வீட்டிற்கு வரும் சக்திவேல் இது குறித்து கத்திக் கொண்டிருக்க அந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் கோமதி மற்றும் செந்தில் வெளியில் வருகின்றனர்.

நேரடியா மோத முடியவில்லைன்னு பொம்பள புள்ளைய வச்சி பிரச்சினை பண்றீங்களா என சக்திவேல் கேட்க அதை நீ பேசாத என கோமதி திட்டுகிறார். செந்தில் அரசாங்க நிலத்தில் கடை கட்டினால் இடிக்கதான செய்வாங்க எனக்கூறி அவரை திட்டி அந்த இடத்தில் இருந்து சென்று விடுகிறார்.

மறுபக்கம் ஹோட்டலில் தங்கமயில் வேலை செய்து கொண்டிருக்க சரவணன் தன்னுடைய நண்பருடன் அதே ஹோட்டலுக்கு சாப்பிட வருகிறார். இதை அறியாத தங்கமயில் அவர்கள் ஆர்டர் செய்த சாப்பாடு எடுத்துக்கொண்டு பரிமாற வர அப்போது சரவணன் அவரைப் பார்த்து விடுகிறார்.

இதில் அவர் அதிர்ச்சியாக நிற்க தங்க மயிலுக்கு அழுகை வந்துவிடுகிறது. சரவணனிடம் சமாதானம் பேச அவர் வெளியில் போக ஸ்கூலில் சர்டிபிகேட் கேட்டதால் அதை விட்டேன். வேறு வேலை இல்லாமல் இதை பார்ப்பதாக சமாளிக்கிறார்.

ஸ்கூல் பிரின்சிபில் அப்பாவுக்கு தெரிஞ்சவரு சொல்லி இருக்கலாமே எனக் கேட்க பிரசர் தந்ததாக கூறுகிறார். உடனே நம்ம கடையில் தான் இங்க சரக்கு வருது தெரியுமா என கேட்க தங்கமயில் தனக்கு தெரியும் என்கிறார். சரவணன் தங்கமயிலை திட்டிக் கொண்டிருக்கிறார்.

Next Story