Pandian Stores2: மீனாவுக்கு ஆறுதல் சொன்ன பாண்டியன்… அரசி வாழ்க்கை என்ன ஆகப்போகுதோ?

pandian stores2
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோடின் தொகுப்புகள்.
தங்கமயில் ஹோட்டலில் வேலை செய்வதை தெரிந்து கொள்ளும் சரவணன் அவரை சரமாரியாக திட்டிக் கொண்டிருக்கிறார். வீட்டில் சொல்லணும் என்று தான் நினைத்தேன் ஆனால் முடியவில்லை என தங்கமயில் அவரிடம் மன்னிப்பு கேட்கிறார். சரவணன் கோபமாக சென்று விடுகிறார்.
மீனா வீட்டிற்கு வருகிறார் பாண்டியனிடம் நடந்த விஷயங்களை கூற அவர் நீ எப்பயுமே தவறு செய்ய மாட்ட. உன் மனசுக்கு சரின்னு தோன்ற விஷயத்தை தான் செய்வ என பாண்டியன் தன் மருமகளுக்கு சப்போர்ட்டாக பேசுகிறார். இருந்தும் கோமதி கட்டிய கடையை இடித்திருக்க வேண்டாம் என்கிறார்.
ஆனால் மற்றவர்கள் இடித்து விட்டதால் சட்டரீதியாக அதுதான் சரி என மீனா கூறுகிறார். அப்பொழுது ராஜி வர உனக்கு என் மேல் எதுவும் கோபம் இல்லையா என கேட்க நீங்க தப்பு செய்யலையா அக்கா. எனக்கு உங்கள் மேல் எந்த கோபமும் இல்லை எனக் கூறி விடுகிறார்.

மாப்பிள்ளை அரசிக்கு கால் செய்து பேசிக்கொண்டிருக்க அவர் பிடி கொடுக்காமல் பேசுவதை பார்த்து போனை வைத்து விடுகிறார். மீனாவிற்கு ஃபோன் செய்து அரசி நடந்து கொள்வதை குறித்து திருமணத்தில் அவருக்கு விருப்பம் இல்லையோ எனக் கேட்க மீனா அதிர்ச்சி அடைகிறார்.
தான் அரசியிடம் பேசுவதாக கூறி ரூமிற்கு சென்று பேசிக்கொண்டு இருக்கிறார். அரசி எனக்கு குமார் மேல விருப்பம் இல்லை. இருந்தும் இது இல்லனா அது இல்லனா இது என என்னால் மாற முடியவில்லை அண்ணி. எனக்கு கொஞ்சம் நேரம் வேண்டும் என்கிறார்.
வீட்டில் எல்லாரும் காரசாரமாக பேசிக்கொண்டு இருக்க தங்கமயில் அப்போது வருகிறார். நம்மை தான் மாட்டிவிட்டாரோ என அவர் சந்தேகப்பட ஊருக்கு செல்லும் இடத்தில் சமையல் குறித்து பேசிக்கொண்டு இருப்பதாக பாண்டியன் சொல்கிறார். இருந்தும் தங்கமயிலை சரவணன் முறைத்து கொண்டு இருக்கிறார்.