Pandian Stores2: இருக்குற பிரச்னையில இந்த குதுகலம் தேவையா? கோமதியின் சேட்டை ஓவரா இருக்கே!

by Akhilan |
Pandian Stores2: இருக்குற பிரச்னையில இந்த குதுகலம் தேவையா? கோமதியின் சேட்டை ஓவரா இருக்கே!
X

pandian stores

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.

சரவணன் தனக்குத் தெரிந்த விஷயத்தை எப்பொழுது வீட்டில் சொல்ல போற என தங்க மயிலிடம் கேள்வி கேட்கிறார். அவர் பதற்றமாக இருக்க வீட்டில் இருப்பவர்கள் என்ன விஷயம் என கேட்கின்றனர். மயிலிற்கு நான்கு நாட்கள் லீவ் கிடைத்து விட்டதாக சரவணன் கூறுகிறார். இதை கேட்கும் தங்கமயில் அமைதியாகிறார்.

உடனே அவரும் ஆமாம் எனக்கு லீவ் கிடைத்திருக்கிறது என சொல்லி சமாளிக்கிறார். ராஜி உங்க மேனேஜர் ஒரு நாள் லீவு தர மாட்டாரே இதை எப்படி கொடுத்தார் என கேட்கிறார். இருந்தும் மயில் எப்படியோ சமாளித்து லீவு வாங்கி விட்டதாக சொல்லுகிறார்.

உடனே கோமதி சுகன்யாவையும் தங்களுடன் வருமாறு அழைக்க அவர் மனதில் இதுங்களோட போறதா என நினைத்துக்கொண்டு தான் வந்தால் வீட்டை யார் பாத்துப்பாங்க என்கிறார். பழனியும் நீயும் போய்விட்டு வா எனக் கூற ஆனால் சுகன்யா செல்வதற்கு மறுப்பு தெரிவித்து விடுகிறார்.

மறுபக்கம் ரூமிற்கு வரும் மயில் சரவணன் குறித்து பயந்து கொண்டே வந்த அமருகிறார். அவர் எதற்காக இப்படி செய்த எனக் கேட்க என்னுடைய தொலைந்த சர்டிபிகேட் கிடைக்கும் வரை இந்த வேலை செய்யலாம் என நினைத்ததாக கூறுகிறார்.

கிடைக்கலன்னா இந்த வேலையை நீ செஞ்சிக்கிட்டு இருப்பியா என்கிறார். இந்த ஒரு பொய் தானா இல்ல இன்னும் எத்தனை பொய் இருக்கா எனக் கேட்க மயில் அதிர்ச்சியுடன் பார்க்கிறார்.

அடுத்த நாள் எல்லாரும் கிளம்ப மீனா செல்வது குறித்து செந்தில் பீல் செய்து பேசுகிறார். அவரும் கலாய்த்து விட்டு நாலு நாள் தானே என சமாளிக்கிறார். ராஜி மற்றும் கதிர் பேசிக்கொண்டு இருக்க அவருடைய செலவுக்கு கதிர் காசு கொடுத்து அனுப்புகிறார்.

பின்னர் எல்லாரும் கிளம்பிவிட கடைக்கு வந்து விடுகின்றனர். பழனிக்கு கால் செய்யும் சுகன்யா உடனே வீட்டுக்கு வா என்னால் தனியாக இருக்க முடியாது என சத்தம் போடுகிறார். பழனி எங்க அக்கா தனியா தான் இருக்கும். என்னால் வர முடியாது என கால் கட் செய்கிறார்.

சரவணன் கடைக்கு வர என்ன விஷயம் என்கிறார் பாண்டியன். தனக்கு இன்னைக்கு வேலை இல்லை அதான் வந்தேன் என்கிறார். உடனே பாண்டியன், சரவணனிடம் பாத்து கத்துக்கோ என செந்திலை கூற நானும் காலையில் இருந்து நிறைய வேலைகளை பார்த்தேன் என பதிலடி கொடுக்கிறார்.

Next Story