Pandian Stores2: ராஜியின் திடீர் ஆசை… முட்டுக்கட்டை போடும் கோமதி… என்னப்பா நடக்குது?

by Akhilan |
Pandian Stores2: ராஜியின் திடீர் ஆசை… முட்டுக்கட்டை போடும் கோமதி… என்னப்பா நடக்குது?
X

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடின் தொகுப்புகள்.

கோமதி ராஜி, மீனா மற்றும் அரசியை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சாமி கும்பிட செல்கிறார். மயிலுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் வீட்டிலே இருந்து விட்டதாக மீனா கோமதியிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். எல்லோரும் சாமி கும்பிட்டு விட்டு வெளியில் வருகின்றனர்.

வாசலில் நடன போட்டிக்கான மிகப்பெரிய பேனர் ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. அதில் முதல் பரிசிற்கு காரும், இரண்டாம் பரிசாக வைக்கும் கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை பார்க்கும் ராஜி அருகில் இருந்த உதவியாளரிடம் இதெல்லாம் உண்மையா என கேட்க போட்டி நடத்துவர் மிகப்பெரிய ஆள் கண்டிப்பாக கொடுப்பார் என்கிறார்.

கதிருக்கு பைக் வாங்கிக் கொடுப்பதற்காக அந்த போட்டியில் கலந்து கொள்ள ராஜி முடிவெடுக்கிறார். சுகன்யா பழனியை வேலை வாங்கிக் கொண்டிருக்கிறார். வீட்டை ஒட்டடை அடித்து விட்டு அவர் அடுத்த வேலையை சொல்லி பழனியை திட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் சரவணன் இதைப் பார்த்து விடுகிறார்.

உடனே சுகன்யா சரவணனிடம் மாற்றிப் பேசி பழனியை விட்டு விடுகிறார். பழனி கோமதிக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் தெரிந்தால் அவர் மன சங்கடப்படுவார் எனவும் குறிப்பிடுகிறார். வீட்டிற்கு வரும் ராஜி நடன போட்டி குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறார்.

அப்போ வரும் மீனா இது குறித்து அத்தையிடம் பேசுமாறு அவரை அனுப்புகிறார். ராஜி வந்து அமர்ந்து கோமதிக்கு ஐஸ் வைத்து பேசி நடன போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் தன்னுடைய ஆசையை கூற கோவிலுக்கு வந்தது சாமி கும்பிடதால் என அவர் இதில் கலந்து கொள்ள கூடாது என மறுப்பு தெரிவித்து கிளம்பி விடுகிறார்.

ராஜி குழம்பி போய் நிற்க என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறார். ரூமிற்குள் அழுது கொண்டிருக்கும் தங்கமயில் தொடர்ச்சியாக சரவணன் கால் செய்ய அவர் எடுக்காமல் இருக்கிறார். பின்னர் அம்மாவிற்கு கால் செய்து தான் சரவணன் இடம் அகப்பட்ட விஷயத்தை கூறுகிறார்

Next Story