Pandian Stores2: சரவணன் முடிவால் எஸ்கேப்பான தங்கமயில்… ராஜிக்காக களமிறங்கும் மீனா!

by Akhilan |
Pandian Stores2: சரவணன் முடிவால் எஸ்கேப்பான தங்கமயில்… ராஜிக்காக களமிறங்கும் மீனா!
X

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.

தங்கமயிலுக்கு கால் செய்யும் சரவணன் அவர் சர்டிபிகேட் குறித்து கேட்கிறார். நீ என்கிட்ட இனிமே எந்த பொய்யும் சொல்ல வேண்டாம் எனக் கூறி அவர் அப்ளே பண்ணதுக்கு எதுவும் ஆதாரம் தந்தாங்களா எனக் கேட்கிறார். மயில் முழிக்கிறார்.

உன்னுடைய சர்டிபிகேட்டை நானே வாங்கித் தரேன். அதன்பின்னர் நம்ம ரெண்டு பேரும் பேசிக்கலாம் எனக் கூறி ஒரு போனை வைத்து விடுகிறார். இங்கு இருந்தால் நம்ம மேலும் பிரச்சனையும் சிக்கிக் கொள்வோம் என தங்கமயில் ஊருக்கு செல்ல முடிவெடுக்கிறார்.

உடனே கோமதியிடம் சென்று என்னுடைய ஆபீஸில் உடனே திரும்பி வர சொன்னதாக பொய் கூறுகிறார். ஆனால் அவரோ போன் பண்ணி கூட நான் பேசுகிறேன் என கேட்கிறார். இல்ல அத்த நான் பண்ண வேண்டிய வேலை ஒன்னு பாக்கி இருப்பதாக சொல்லி தங்கமயில் ஊருக்கு கிளம்பி விடுகிறார்.

ராஜி டான்ஸ் பிராக்டிஸ் செய்து கொண்டிருக்க எப்படியாவது அத்தையிடம் அனுமதி வாங்கி கொடுக்க வேண்டும் என மீனாவிடம் கேட்கிறார். மீனாவும் கோமதியிடம் சென்று நாம் இங்கு வந்ததுக்கே ஒரு காரணம் இருக்குதானே. இதுதான் அம்மன் முடிவு போல. நீங்க தடுத்தீங்கன்னா உங்க மேல தான் சாமி குத்தம் வரும்னு கேட்டேன் அவரை பேசி சமாளித்து வைக்கிறார்.

இதெல்லாம் செலக்ட் ஆக மாட்டா எனக்கூறி ஒரு முறையாட கோமதியிடம் இருந்து ராஜிக்கு அனுமதி வாங்கி கொடுத்து விடுகிறார். பின்னர் கடைசியில் செந்தில் மீனா நியாபகமாக அமர்ந்து இருக்கிறார். அப்போ வரும் பாண்டியன் பேங்கிற்கு சென்று பணம் எடுத்து வர அவரை அனுப்புகிறார்.

அப்போ கிளம்பும் செந்திலுக்கு மீனாவின் அப்பா கால் செய்து உடனே பார்க்கணும். அருகில் இருக்கும் ஜூஸ் கடைக்கு வாங்க எனக் கூறி போனை வைக்கிறார்.

Next Story