Pandian Stores2: ராஜியின் கல்யாண ரகசியத்தை உடைத்த கோமதி… முழிக்கும் மீனா.. என்ன நடந்தது?

by Akhilan |   ( Updated:2025-05-05 05:28:37  )
Pandian Stores2: ராஜியின் கல்யாண ரகசியத்தை உடைத்த கோமதி… முழிக்கும் மீனா.. என்ன நடந்தது?
X

#image_title

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.

ராஜி பைக் கிடைத்ததால் சந்தோஷமாக இருக்க அங்கு வரும் கதிர் எனக்காக தான் இந்த போட்டியில் நீ கலந்துக்கிட்டீயா எனக் கேட்க ராஜி அதெல்லாம் இல்லை. நீ என் தன்மானத்தை சீண்டிவிட்டுட்ட அதான் கலந்து ஜெயிச்சு காட்டினேன் என்கிறார்.

அந்த பைக்கை கதிரிடம் கொடுத்து ராஜி சந்தோஷம் அடைகிறார். வீட்டில் எல்லாரும் கிளம்பிக்கொண்டு இருக்கிறார். அப்போது வரும் மீனா மற்றும் செந்திலிடம் கதிர் மற்றும் ராஜி எங்கே எனக் கேட்கிறார் கோமதி. அவர்கள் பேசிக்கொண்டு இருப்பதாக சொல்கிறார் மீனா.

உடனே கோமதி எனக்கு ஒன்னு புரியலை. நீங்க லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. ஆனா அவங்க புடிக்காம பண்ணிக்கிட்டு என்ன பேசுவாங்க என்கிறார். மீனா ஜெர்க்காகி என்ன செய்வது என முழிக்க அரசி மற்றும் செந்தில் கண்டுபிடித்து விடுகிறார்.

pandian stores

என்னது அவங்க பிடிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா என்கிறார். உடனே மீனா கொஞ்சம் சமாளிக்க பார்க்க ராஜி இரண்டாம் பரிசுக்காகவே போட்டியில் கலந்துக்கொண்டதை சொல்லி விடுகிறார். ராஜி வர கோமதி சிரிக்கிறார். இருவரையும் செந்தில் கலாய்த்து கொண்டு இருக்கிறார்.

வீட்டில் குமரவேல் வந்து அமர்ந்து இருக்க அவரை சக்திவேல் திட்டிக்கொண்டு இருக்கிறார். ஊரில் தான் பெண்ணிடம் அடி வாங்கிட்டு இருந்த அம்பாசமுத்திரம் போயிட்டு அடி வாங்கிட்டு வரணுமா என்கிறார். குமரவேல் சும்மா இருப்பா எனக் கூற அவர் தொடர்ந்து திட்டிக்கொண்டே இருக்கிறார்.

அவர் மனைவி வர குமரவேல் அடி வாங்கிட்டு வந்த விஷயத்தை சொல்லிவிடுகிறார். அவர் பதறி தலையை பார்த்து ஏன் இப்படி வாங்கிட்டு வந்து இருக்க என கவலைப்படுகிறார். அரசியை ஏன் நீ பார்க்க போன எனவும் திட்ட சக்திவேல் இதை அண்ணனிடம் சொல்லாதே என்கிறார்.

எல்லாரும் காரில் சென்று கொண்டு இருக்க இடஞ்சலாக இருப்பதால் அரசி திட்டிக்கொண்டு இருக்கிறார். ராஜி போட்டியில் ஜெயிச்ச விஷயத்தை எப்படி சொல்ல எனக் கேட்க கோமதி இப்போ கேளு என திட்டுகிறார். இதனுடன் எபிசோட் முடிந்தது.

Next Story