அரசியின் மாப்பிள்ளை வந்தாச்சு… சுகன்யா பிளானை காலி செய்த மீனா… அடுத்த அதிரடி!

pandian stores2
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடின் தொகுப்புகள்.
அரசி அமைதியாக உட்கார்ந்து இருக்க மீனா சரியா இருக்கியா எனக் கேட்க கொஞ்ச நாளா சரியில்லாம இருந்தேன். இப்போ சரியா இருக்கேன் என்கிறார். தொடர்ந்து மயில் வர அவரின் வேலை குறித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். தங்கமயில் அரசிக்கும் ஆறுதல் சொல்லுகிறார்.
அடுத்த நாள் காலை அரசியை பெண் பார்க்க மாப்பிள்ளை வீடு வருவதால் குடும்பமே தடபுடலாகா தயாராகி வருகின்றனர். கோமதி மற்றும் பாண்டியன் வேண்டிக்கொள்கின்றனர். கோமதி பயந்து போய் பாண்டியனிடம் பேசிக்கொண்டு இருக்கிறார்.
கோமதி அரசி தயாராக இருக்கிறாரா என்று வந்து பார்த்து பேசுகிறார். எதுவும் செஞ்சிடாத உங்க அப்பா உயிரோட இருக்க மாட்டாரு என வருத்தமாக சொல்ல மருமகள்கள் பதறி ஏன் இப்படி பேசுகிறீர்கள் என அவரை அதட்டுகின்றனர். சொல்ல வேண்டியதை சொல்லிதானே ஆகணும் என்கிறார்.

பின்னர் அவர் சென்று விட சுகன்யா வருகிறார். நீங்களாம் போய் வேலையை பாருங்க அரசியை நான் பார்த்து கொள்கிறேன் எனக் கூற எங்களுக்கு எந்த வேலையும் இல்லை. நாங்களே அரசியுடன் இருக்கிறோம் எனக் கூறி விட அவர் சென்று விடுகிறார்.
சமையல் அறையில் கோமதி மற்றும் தங்கமயில் வேலை செய்துக்கொண்டு இருக்க அங்கு சுகன்யா வருகிறார். நான் எதுவும் ஹெல்ப் பண்ணவா கேட்க அப்பா இப்பவாச்சு எனக் கூறி சுகன்யாவிடம் வேலை வாங்குகிறார். தங்கமயிலை வெளியில் கறிவேப்பிலை பறிக்க செல்கிறார்.
அங்கு பாண்டியனின் மகன்கள் யோசனையுடன் உட்கார்ந்து இருக்கின்றனர். தங்கமயில் ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கீங்க எனக் கேட்க பழனி அரசியை பற்றி விசாரிச்சு இருக்கோம் என்கிறார். பின்னர், மாப்பிள்ளை வீட்டினர் அரசியை பெண் பார்க்க வருகின்றனர்.
எல்லாரும் அறிமுகம் செய்து வைக்க சதீஷ் வருகை தருகிறார். அவருக்கு பாண்டியன் வீட்டு ஆட்களை உமையாள் அறிமுகம் செய்து வைக்கிறார். பின்னர் வீட்டுக்குள் வர தங்கமயில் போய் மாப்பிள்ளையை பார்க்க அவரும் கிணடலாக மாப்பிள்ளை ஓகேவா எனக் கேட்க சிரிக்கிறார்.
பின்னர் அரசியிடம் வந்து மாப்பிள்ளை நல்லா இருப்பதாக கூறுகிறார். அரசியை அழைத்து வந்த பின்னர் மாப்பிள்ளை வேலை குறித்து பேசுவதாக சொல்லி விடுகிறார்.