அரசிக்காக சிக்கலில் இறங்கிய மருமகள்கள்… மீண்டும் பலியாடு ஆகும் மீனா… என்ன நடக்குமோ?

pandian stores2
Pandian Stores2: பாண்டியன் தன்னுடைய மகள் அரசிக்கு அக்காவின் பையனை பெண் பார்க்க வர சொல்லிய நிலையில் திருமணத்தினை முடிவு செய்து விடுகிறார். இதற்கான எபிசோட் இன்று ஒளிபரப்பாக இருக்கிறது.
திடீரென பாண்டியன் நிச்சயதார்த்தத்தை முடிவு செய்துவிட குடும்பத்தினர் அதிர்ச்சியாக இருக்கின்றனர். இதற்காக அரசியின் படிப்பு குறித்து பேச மாப்பிள்ளையின் நம்பரை ராஜியை விட்டு கதிர் மூலம் வாங்க சொல்லி அனுப்பி இருக்கின்றனர்.
மாப்பிள்ளை உடன் பேசிக்கொண்டிருக்கும் கதிரை அழைக்கிறார் ராஜி. முதலில் சும்மா பேச்சை தொடங்கி பின்னர் மாப்பிளையின் போன் நம்பரை வாங்கி கொடு என கேட்க கதிர் எதற்கு என கேட்கிறார். நான் சொன்னா ஏன்னு கேட்காம நீ செய்வேன்னு நினைச்சேன் என்கிறார்கள் ராஜி.
உடனே கதிர் சரி வாங்கி தருகிறேன் என சென்று மாப்பிள்ளையை தனியாக அழைத்து சும்மா பேச்சு கொடுத்து பின்னர் நம்பரை வாங்கி விடுகிறார். பின்னர் மாப்பிள்ளை வீட்டார் கிளம்பி சென்று விடுகின்றனர். பாண்டியன் மற்றும் கோமதி பேசிக் கொண்டிருக்க மீனா அங்கு வருகிறார்.
சரவணன் திருமணத்தில் நீதான் நிறைய வேலை செய்தாய். அரசி கல்யாணத்தையும் நீ தான் எடுத்து நடத்தணும் என கேட்கிறார். மீனா அதை எல்லாம் நான் செய்கிறேன் மாமா ஆனால் அரசிக்கு இந்த திடீர் திருமணம் தேவையா என கேட்கிறார். பாண்டியன் என் பிள்ளைகளில் அரசியை தான் நான் அதிகமாக நம்புகிறேன்.

இனி தன்னால் நம்ப முடியாது என்கிறார். பின்னர் அரசியின் படிப்பு குறித்து கேட்க அதை மாப்பிள்ளை விட்டால் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறிவிடுகிறார். இது குறித்து ராஜி மற்றும் தங்க மயிலிடம் ரூமில் உட்கார்ந்து மீனா புலம்பி கொண்டிருக்கிறார்.
திட்டமிட்டபடி மாப்பிள்ளை இடம் பேசலாமா என பேச்சை தொடங்க தங்கமயில் தனக்கு பேச தெரியாது. உளறி விடுவேன் என பின்வாங்கி விடுகிறார். ராஜி நான் அவரை விட சின்ன பெண் நான் பேசினால் சங்கடப்பட கூடும் எனக் கூறி அவரும் நழுவ மீனாவை கோர்த்துவிடுகின்றனர்.
மீனா மாப்பிள்ளைக்கு கால் செய்து அரசி குறித்து தனியாக பேச வேண்டும் நாளை கோயிலுக்கு வந்துவிட கூறுகிறார். மாப்பிள்ளையும் சரி என கூறிவிடுகிறார். பின்னர் அவர் இது குறித்து அம்மா உமையாளிடம் கூற அவர் தயக்கத்துடன் இருக்கிறார்.
பின்னர் வீட்டில் பாண்டியன் அரசின் திருமண குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். பழனியிடம் பேசி மண்டபத்தை முடிவு செய்ய சொல்லி அனுப்புகிறார். இதில் என்ன நடக்கும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.