பாண்டியன் குடும்பத்தை காக்கும் மீனா… சுகன்யா வகையாக சிக்க வைத்த சம்பவம்!

pandian stores2
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
அரசியை காலேஜிற்கு அழைத்து செல்ல செந்தில் கிளம்பி கொண்டிருக்கிறார். அப்பொழுது அங்கு வரும் சுகன்யா தான் அழைத்துச் செல்வதாக கோமதியை சமாளித்து விட்டு ஆட்டோவில் புறப்பட்டு செல்கிறார். ஆனால் இதை பார்க்கும் மீனாவிற்கு சந்தேகம் எழுகிறது.
செந்திலிடம் இதுகுறித்து கூற அவர் சுகன்யாவை பிடிக்காமல் இப்படி பேசுகிறாயா என கேட்கிறார். மீனா கோபமாக முறைக்க சும்மா கலாய்த்தேன் என கூறி இருவரும் அரசியின் கல்லூரிக்கு செல்கின்றனர். அரசி மற்றும் சுகன்யா இருவரும் கல்லூரி வாசலுக்கு வந்து விடுகின்றனர்.
ஆனால் குமார் வராமல் இருக்க அரசியை விடாமல் சுகன்யா பேச்சு கொடுத்து கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் குமார் வர அரசி அதிர்ச்சியாகி கிளம்ப பார்க்க சுகன்யா குமாருக்கு ஆதரவாக பேசுகிறார். தன்னிடம் பேசுமாறு குமார் அரசியை வலுக்கட்டாயம் செய்து கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் அங்கு வரும் மீனா மற்றும் செந்தில் இருவரும் இதை பார்த்து விடுகின்றனர். செந்தில் கோபமாக குமாரை அடித்து அனுப்புகிறார். சுகன்யா உடனே முகத்தை மாற்றி தானும் குமாரை திட்டியது போல பேசுகிறார். அரசி அழுது கொண்டிருக்கிறார்.
இதை பார்த்த மீனா கடுப்பாகி சுகன்யாவை திட்ட செந்தில் அமைதியாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் சுகன்யா எனக்கும் இந்த குடும்பத்தில் மேல அக்கறை இருக்கிறது. இதற்கு மேல் நீ என்ன வேணாலும் செய்து கொள் என சொல்லி விடுகிறார்.
சுகன்யா கிளம்பி விட செந்திலுடைய அப்பாவிடம் கூறலாம் என வீட்டுக்கு கிளம்புகிறார். ஆனால் மீனா இப்போ வீட்டில் அத்தை மட்டும் தான் இருப்பாங்க. இப்போ இதை போய் சொன்னா அரசியின் படிப்பு தான் வேணாகும். அதனால் நைட் சொல்லலாம் என அமைதி செய்கிறார்.
ஆனால் வீட்டிற்கு வரும் சுகன்யா நடந்த விஷயங்களை அப்படியே அழுது கொண்டு மீனா மீது பழியை தூக்கி சுமத்துகிறார். தன்னை கண்டபடி அவர் பேசி விட்டதாகவும் உங்களிடமும் என்னை குறித்து தப்பாக சொல்லுவேன் என்றும் மீனா மீது அவதூறு கூறிவிடுகிறார்.
இருந்தும் கோமதி மீனா அப்படி பேசும் ஆள் கிடையாது. அவள் வரட்டும் பேசிக்கொள்ளலாம் என்கிறார். பாண்டியனும் நானும் மீனா வரட்டும் கேட்கிறேன் என சொல்லி சுகன்யாவை உள்ளே செல்ல கூறுகிறார். அவர் ரூமிற்கு சென்று விட பழனி பின்னால் சென்று பேசாமல் அமைதியாக நிற்கிறார்.