Pandian Stores2: மீண்டும் ட்ரிப் பிளான் செய்யும் கோமதி… மீனாவுக்கு பிரச்னை கொடுக்கும் சக்திவேல்..

pandian stores2
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.
மருமகள்கள் அரசிக்காக நாங்க செய்கிறோம் எனக் கூற பாண்டியன் அதெல்லாம் வேண்டாம். நான் பார்த்துக்கிறேன் என்கிறார். இதுகுறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். அரசியிடமும் இதுகுறித்து சொல்ல வேண்டாம் என்கிறார்.
அந்த நேரத்தில் அங்கு வரும் அரசி என்னால தான் அப்பா. உங்களுக்கு இந்த கஷ்டம். சாரிப்பா எனக் கூற அதெல்லாம் இல்லம்மா. நீ எதையும் யோசிக்காத எனச் சொல்லிவிட்டு செல்கிறார். ரூமிற்குள் மீனா வர செந்தில் யோசனையில் இருக்கிறார்.
அவரிடம் என்னவென்று கேட்க வேணாம் இப்போ பேசுனா சண்டைதான் வரும் என்கிறார். சொல்லுங்க எனக் கேட்க எனக்கு வேலைக்கு ஒரு லட்சம் தேவைப்பட்டது. ஆனால் அப்பா அதுக்கு ஒத்துக்கலை. இப்போ கார் வாங்கி கொடுக்க ஒத்துக்கிறாரு என்கிறார்.
மீனா இப்போ அரசியோட நிலைமை அப்படி இருக்குப்பா. அவளை எப்படியாச்சும் கல்யாணம் செஞ்சி வைக்க மாமா இப்படி செய்றாரு என்கிறார். இருந்தும் செந்தில் கோபமாக இருக்க மீனா அவரை சமாதானம் செய்கிறார். மறுபக்கம் கோமதி தனக்கு ஒரு வேண்டுதல் இருக்கு அங்க போய் வரணும் என்கிறார்.

உடனே பாண்டியன் ஏற்கனவே பூம்பாறை, திருச்செந்தூர் போன இப்போ என்ன மறுபடியும் எனக் கூற சாமி விஷயமுங்க. சொன்னா செஞ்சிடணும். நான் போய்ட்டு வந்தா எல்லாம் சரியாகும் என்கிறார். மீனா அதான் அத்தை ஆசைப்படுறாங்களே மாமா.
போய்ட்டு வரட்டும். நானும் கூட போறேன் என்கிறார். உனக்கு லீவ் பார்த்துக்கிறேன் எனச் சொல்லுகிறார். ராஜி நானும் போறேன் எனக் கூற கோமதி மயிலை நீயும் வா நம்ம போய்ட்டு வரலாம் எனக் கூற லீவ தரமாட்டாங்க என்கிறார்.
அரசியை அழைச்சிட்டு தான் போவேன் என்கிறார் கோமதி. சரியென சம்மதம் தெரிவித்து விடுகிறார் பாண்டியன். அடுத்து, மீனா சக்திவேல் கடையை இடிக்க வேலைக்கு வந்து இருக்கிறார். அப்போவரும் சக்திவேல் மிரட்ட அமைதியாக இருக்கிறார்.
மீடியாக்களை அழைச்சு இவங்களுக்கு என்கூட குடும்ப பிரச்னை இருக்கு. அதற்குதான் பழி வாங்க இப்படி செய்றாங்க என்கிறார். இதற்கு கடுப்பான மீனா நோட்டீஸ் கொடுத்தாச்சு. இவர் மேல தப்பு இல்லனா அதுக்கு தடை வாங்கி இருக்கலாம் என பாயிண்ட்டை பிடிக்கிறார்.