விலகிய வசந்த் வசி… மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வரும் முதல் சீசன் நடிகர்… களைக்கட்டும் போகும் கூட்டணி..

by Akhilan |   ( Updated:2024-07-19 07:02:58  )
விலகிய வசந்த் வசி… மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வரும் முதல் சீசன் நடிகர்… களைக்கட்டும் போகும் கூட்டணி..
X

தொடர்ந்து விறுவிறுப்புகள் அதிகரித்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் சீசனில் இருந்து செந்திலாக நடித்து வந்த வசந்த் வசீ தற்போது வெளியேறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஆனால் அந்த கேரக்டரில் நடிக்க இருக்கும் நடிகர் என்று ரசிகர்கள் இன்னும் குஷியாகி இருக்கின்றனர்.

அண்ணன் தம்பிகளின் கதையை வைத்து ஒளிபரப்பான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் தனமாக சுஜிதா, மூர்த்தியாக ஸ்டாலின், ஜீவாவாக வெங்கட், மீனாவாக ஹேமா, கதிராக குமரன் ஆகியோர் நடித்து பிரபலம் அடைந்தனர். இவர்கள் சீரியல் கேரக்டர் பெயரே இவர்களுக்கு அதிகளவில் புகழை பெற்றுக் கொடுத்தது.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசன் முடிந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. பொதுவாகவே விஜய் டிவியில் இரண்டாவது சீசன் சீரியல்கள் பெரிய அளவில் தொய்வை தான் சந்திக்கும். அதுபோலவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சில எபிசோடுகளில் எழுத்து மூடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த சீசன் ரசிகர்களிடம் தற்போது வரவேற்பை பெற்று இருக்கிறது. இதில் முதல் சீசனில் நடித்த ஸ்டாலின், ஹேமா நடித்து வருகின்றனர். இதில் ஹேமாவிற்கு ஜோடியாக நடிக்கும் வசந்த் வசீ தற்போது சீரியல் இருந்து வெளியேறி இருக்கிறார். அவர் கேரக்டரில் செந்திலாக மீண்டும் நடிகர் வெங்கட் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

முதல் சீசனில் ஜீவா மற்றும் மீனாவாக நடித்த இவர்கள் கூட்டணி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. நிறைய ரசிகர்களும் குவிந்தனர். தற்போது இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் இருக்கு வரவேற்பு இன்னும் கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு வாசல் சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த ஜீவா இரண்டாவது சீசனில் நடிக்க முடியாமல் இருந்தார். தற்போது அந்த சீரியல் முடிந்து இருக்கும் நிலையில், இரண்டாவது சீசனில் வெங்கட் எண்ட்ரி மேலும் சீரியலின் வரவேற்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story