சுகன்யாவின் மோசமான நாடகம்… தவறவிட்ட கோமதி… சரியாக பிடித்த மீனா - ராஜி!

by Akhilan |   ( Updated:2025-04-04 00:44:51  )
சுகன்யாவின் மோசமான நாடகம்… தவறவிட்ட கோமதி… சரியாக பிடித்த மீனா - ராஜி!
X

pandian stores2

Pandian Stores 2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலின் இன்றைய எபிசோட்டின் தொகுப்புகள்.

மீனாவுக்கு சப்போர்ட்டாக பேசி பழனி வர அவரிடம் திமிராக பேசுகிறார் சுகன்யா. உடனே உன்னை என்ன செய்கிறேன் பார் எனக் கூறி கத்த பாண்டியன் மற்றும் கோமதி வருகின்றனர். அவர்கள் என்ன ஆச்சு எனக் கேட்க சுகன்யா இதெல்லாம் சொல்ல முடியாத கொடுமை.

நான் எப்படி என் வாயால சொல்லுவேன். எல்லாம் ஒரு அளவுதான். ஒரு பெண்ணை பிடிக்கலனா தொடக்கூடாதுனு உங்க வீட்டில சொல்லி கொடுக்கலையா என பழனி மீது அவதூறாக குற்றச்சாட்டை முன் வைக்கிறார். இதில் குடும்பத்தினர் ஆடி விடுகின்றனர்.

பழனி அதிர்ச்சியில் இருக்கிறார். பாண்டியன் ரொம்ப பேச முடியாமல் போக கோமதியை சுகன்யாவை அழைத்துக்கொண்டு போய் தங்கள் ரூமில் படுக்க வைக்கிறார். பழனி அழுதுக்கொண்டே வாசலுக்கு சென்று என்ன செய்வது எனத் தெரியாமல் திணறி இருக்கிறார்.

நடந்துக்கொண்டே இருக்க காலையில் விடிந்து விடுகிறது. சரவணன் வந்து பழனியை அழைத்து சென்று சோடா வாங்கி கொடுக்கிறார். பழனி என்னை இப்படி பார்த்திருக்கியா என் வாழ்க்கையே மாறி போச்சு. உன் கிட்ட கூட சொல்ல முடியாத நிலையில இருக்கேன்.

pandian stores2

முன்னாடிலாம் கல்யாணம் ஆகாதது மட்டும் தான் பிரச்னையா இருக்கும். இப்போ எல்லாம் என்ன சொல்றதுனே தெரியாம புலம்பிக்கொண்டு இருக்கிறார். வீட்டில் கோமதி சமைத்துக்கொண்டு இருக்க அங்கு வரும் சுகன்யா துவைக்க போறேன். உங்க டிரெஸையும் கொடுங்க என்கிறார்.

கோமதி பரவாயில்லை என அவரை அனுப்பிவிட்டு ராஜி மற்றும் மீனாவை பார்த்துக்கொள்ள சொல்லி விட்டு வெளியில் செல்கிறார். மீனா காலேஜில் நடந்த விஷயத்தை ராஜியிடம் கூறிக்கொண்டு இருக்கிறார். எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு எனக் கூற இருந்தாலும் நம்ம கற்பனை செய்றோமோ அக்கா எனக் கேட்கிறார்.

இருந்தாலும் இந்த விஷயத்திலேயே எடுத்துக்கோ. சித்தப்பா அப்படி நடக்கிற ஆளா எனக் கேட்க ராஜி இல்லை எனத் தலை ஆட்டுகிறார். எனக்கு சந்தேகம் அவர் கல்யாணம் ஆனதில் இருந்து கவலையாகவே இருக்கிறார் எனவும் கூறுகிறார். கோமதி சுகன்யாவிடம் பேசப்போக அங்கு பழனி வருகிறார்.

Next Story