கலங்கும் குடும்பம்… ஆட்டத்தினை தொடங்கிய சுகன்யா… அரசி வாழ்க்கை காலி!

pandian stores2
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.
அரசி தூங்கிக்கொண்டு இருக்க கோமதி அவர் பக்கத்தில் வந்து அமர்ந்து தான் பேசியதை நினைத்து வருத்தம் அடைகிறார். அப்போ அங்கு வரும் கதிர் அவர் அருகில் உட்கார்ந்து இருக்கிறார். நான் அரசியை நிறைய அடிச்சிட்டேன் எனவும் சொல்லுகிறார்.
இதுவரை அரசியை பெரிதாக அடித்ததே இல்லை. இவ சின்ன பொண்ணு. எப்படி இப்படி ஆச்சு என கவலையாக பேசுகிறார். பாண்டியன் அரசி என்பதால் தான் இப்படி உடைஞ்சி போயிட்டாரு என கவலையாக பேசுகிறார். கதிர் உடனே கல்யாணம் வேண்டுமா என்கிறார்.

குமார் சும்மா இருக்க மாட்டான். இந்த பிரச்னைக்கு கல்யாணம் மட்டும் தான் வழி என்கிறார். பாண்டியன் வந்து அரசி மீது ஒரு கண்ணை எப்போதும் வைத்துக்கொள் என்கிறார். ரூமிற்கு வரும் கதிர் கண்ணீர் விட ராஜி கலங்கி விடுகிறார்.
வீட்டில எவ்வளவோ பிரச்னை நடந்து இருக்கு. ஆனா இது தாங்கவே முடியலை. அவள சின்ன பொண்ணா மட்டும் பார்த்தேன். இப்போ அவ படிப்பை முடிக்காம கல்யாணம் செய்து வைக்கிறது ஏத்துக்கவே முடியலை என்கிறார். அரசி கல்யாணம் செஞ்சிட்டும் படிக்கலாம் என்கிறார் ராஜி
அது எப்படி சரியாகும் எனக் கேட்க அதெல்லாம் நான் இப்போ படிக்கலையா? என்னை இந்த வீட்டில் இருப்பவங்க நல்லாதானே பார்த்துக்கிறாங்க. அதுபோல அரசி கல்யாணம் செஞ்சிட்டு போற வீட்டில் நல்லா பார்த்துப்பாங்க. எல்லாம் சரியாகிடும். மாமா, அத்தை சரியாகிடுவாங்க என சமாதானம் செய்கிறார்.
சுகன்யா மற்றும் பழனி தங்கள் ரூமில் இருக்கின்றனர். பழனி தூங்க திடீரென குறட்டை விடுகிறார். இதில் கடுப்பான சுகன்யா பழனியை திட்டி ரூமை விட்டு வெளியே அனுப்புகிறார். காலையில் பழனி ஹாலில் படுத்து இருப்பதை பார்த்து வீட்டில் இருப்பவர்கள் கேட்க சமாளித்து விடுகிறார்.