அரசிக்காக மீனா போட்ட திட்டத்தை காலி செய்த மாப்பிள்ளை மற்றும் கோமதி… அட போங்கப்பா!

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.
காலையில் மருமகள்கள் மூவரும் கிளம்பி நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர். தங்கமயில் தனக்கு நம்ம போட்ட திட்டத்தால் தூக்கமே வரவில்லை எனக் கூறுகிறார். அத்தையிடம் பொய் சொல்லிவிட்டு நம் மூவரும் கிளம்பலாம் என்கிறார் மீனா.
ஆனால் தங்கமயில் தன்னுடைய மேனேஜர் தனக்கு லீவ் தர மாட்டேன் என கூறிவிட்டதால் நான் வர முடியாது என மறுத்து விடுகிறார். பின்னர் ராஜீ மற்றும் மீனா இருவரும் செல்லலாம் என முடிவெடுக்கும் நேரத்தில் கோமதி வர அவர் எங்கே செல்கிறீர்கள் என கேட்கிறார்.
கோயிலுக்கு போவதாக மீனா கூற தானும் வருகிறேன் என கூறி கோமதியும் அவர்களுடன் வருகிறார். இதனால் மீனா என்ன செய்வது எனப் புரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். மூவரும் கோயிலுக்கு வந்த சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க மீனா மாப்பிள்ளையை காண வெளியில் வருகிறார்.

அவர் வாசலில் நிற்க அவரிடம் பேச வரும்போது மாப்பிள்ளை தன்னுடைய அம்மா உமையாளையும் அழைத்து வந்திருக்கிறார். அவர் உள்ளே வந்து ஏன் இப்படி முழிச்சிட்டு இருக்க எனக் கேட்க மீனா எதுவும் சொல்ல முடியாமல் தயங்கியபடியே நிற்கிறார்.
உள்ளே கோமதியும் மீனா எங்கே என ராஜி இடம் கேட்க அவர் கோயிலை சுற்ற சென்று இருப்பதாக கூறி சமாளிக்கிறார். கோமதி ஒன்றாக வந்துவிட்டு இப்படி தனித்தனியாக போவது நல்லாவா இருக்கு என திட்டி விட்டு செல்கிறார். பின்னர் மீனா உமையாள் மற்றும் மாப்பிள்ளையை கோயிலுக்குள் அழைத்து வருகிறார்.
அவர்கள் உள்ளே செல்ல பின்னால் ராஜி மற்றும் கோமதி வருகின்றனர். இவர்கள் பார்த்துக் கொள்வார்களா கோமதி மருமகளின் திட்டத்தை கண்டுபிடிப்பாரா என்பதை நாளை எபிசோடில் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.