மீனாவை அடக்க நினைச்சீங்கனா… உங்க குடும்பமே காலி பாண்டியன் பாத்துக்கோங்க!

by Akhilan |   ( Updated:2025-04-01 22:40:06  )
மீனாவை அடக்க நினைச்சீங்கனா… உங்க குடும்பமே காலி பாண்டியன் பாத்துக்கோங்க!
X

pandian stores2

Pandian Stores2: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன்2 சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.

சுகன்யா பாண்டியனிடம் மீனா குறித்து போட்டுக்கொடுத்து விட்டு வந்து ரூமில் அமர்ந்து இருக்கிறார். பழனி வந்து சந்தேகமாக பார்க்கிறார். மீனா குறித்து அவரிடமும் தவறாக சொல்ல ஆனால் பழனி மீனாவுக்கு சப்போர்ட் செய்கிறார்.

இதனால் கடுப்பான சுகன்யா மீனா மற்றும் பழனி உறவை அசிங்கமாக பேசுகிறார். நான் மீனாக்கு சித்தப்பா முறை எனக் கூற சொந்த சித்தப்பா இல்லை தானே என அவரிடம் அசிங்கமாக பேசுகிறார். இதில் கடுப்பாகும் பழனி அங்கிருந்து சென்று விடுகிறார்.

பாண்டியன் நடு ரோட்டில் முத்துவேலை பார்த்து குமார் காதல் குறித்து பேச அதான் அவன் உன் பொண்ணு பின்னாடி வரமாட்டான் எனக் கூறிவிட்டேனே எனக் கூறுகிறார். ஆனால் பாண்டியன் காலேஜில் குமார் வந்த விஷயம் குறித்து சொல்லுகிறார்.

Pandian Stores2

இதில் முத்துவேல் அதிர்ச்சியாகி விடுகிறார். என் மக அவ கொடுத்த வாக்கை காப்பாத்திட்டு இருக்கா. இனிமே உங்க மகன் பிரச்னை பண்ணா அவன் கை, காலை உடைக்க தயங்க மாட்டேன் எனக் கூறிவிட்டு செல்கிறார். முத்துவேல் கோபமாக வீட்டுக்கு வருகிறார்.

சக்திவேல், குமார் வீட்டில் பேசிக்கொண்டு இருக்க எதுக்கு பேசப்போன எனத் திட்டுகிறார். அங்கு வரும் முத்துவேல் அடிக்க நான் போகலை என சமாளிக்க பார்க்க வீட்டில் இருப்பவர்கள் உன் காலேஜுக்கே நீ போக மாட்ட. அந்த பொண்ணு காலேஜுக்கு எதுக்கு போன நீ என்கிறார்.

என் பேச்சை கேட்டு இருந்தா வீட்டில் இரு. இல்லை வெளியில் சென்றுவிடு என்கிறார். அந்த பொண்ணை தூக்கிட்டு போய் ரிஜிஸ்டர் மேரேஜ் செஞ்சிரு என சக்திவேல் அட்வைஸ் கொடுக்கிறார். வீட்டில் பாண்டியன் மற்றும் கோமதி பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

அப்போது தங்கமயில் வர அவர் பேசிவிட்டு உள்ளே செல்கிறார். சுகன்யா வந்து பாண்டியனை ஏற்றிவிட அப்போ மீனாவை அழைத்து பாண்டியன் பெரியவங்களிடம் சரியா பேசணும் என அட்வைஸ் தருகிறார். மீனாவும் அமைதியா தலையாட்ட அப்போ செந்தில் வருகிறார். அவருக்கு விஷயம் தெரியாது என நினைத்து கோமதி பிரச்னையை கூறுகிறார்.

Next Story