சக்திவேல் கையில் சிக்க போகும் தங்கமயில்.. இது தெரிஞ்சா பாண்டியன் ஆடி தீர்த்துடுவாரே!

pandian stores2
Pandian stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.
தங்கமயில் ரெஸ்டாரெண்ட்டில் வேலை செய்து கொண்டு இருக்க அங்கு சக்திவேல் மற்றும் குமார் வருகின்றனர். இதை பார்த்த தங்கமயில் ஒளிந்து கொள்கிறார். அவர்கள் சாப்பிட செல்ல இவர் வெளியில் சென்று நின்று கொள்கிறார்.
தங்கமயில் பார்த்து விடுவார்களோ என பயந்துக்கொண்டே நிற்க சக்திவேல் சாப்பிட்டு விட்டு கிளம்புகிறார். அப்போ வரும் தங்கமயிலை ஓனர் அழைத்து ஏன் இப்படி ஒளிஞ்சிட்டே இருக்க எனக் கேட்க வேலை செய்ய வேண்டிய நிலை. வீட்டில் தெரிஞ்சவங்க பாத்து சொல்லிட்டா பிரச்னை ஆகிடும் என சமாளிக்கிறார்.
பின்னர் வேலை முடித்து தங்கமயில் கிளம்ப செந்தில் கால் செய்து அரசியை பெண் பார்க்க வரும் விஷயத்தால் லீவ் கேட்டு வரக்கூறுகிறார். தன்னுடைய நாத்தனாரை பெண் பார்க்க வருவதாக சொல்லி ஓனரிடம் கெஞ்சி லீவ் கேட்கிறார்.

பழனிக்கு சுகன்யா கால் செய்து எப்போ வருவீங்க எனக் கேட்க தோன்றப்ப வருவேன் என்கிறார். பஸ்ஸ்டாண்டில் பழனியை பார்க்கும் தங்கமயில் பேசிக்கொண்டு இருக்கிறார். இருவரும் கஷ்டம் குறித்து பேசிக்கொண்டு உள்ளனர்.
வீட்டில் கோமதி மற்றும் சுகன்ய இருவரும் துணி மடித்து கொண்டு இருக்கின்றனர். பழனி தங்கமயிலை பைக்கில் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறார். ரூமுக்குள் அழைக்க பழனி வர மறுக்கிறார். அப்புறம் தோன்றுவதை பேசுவேன். அசிங்கமாகி விடும் வாங்க என அழைத்து செல்கிறார்.
நான் கூப்பிட்ட போது வர மாட்டணு சொன்ன இப்போ தங்கமயிலோட ஊர் சுத்துனதால தான் வரலை என்கிறார். இருவரையும் சேர்த்து வைத்து பேச பழனி என் மக முறை இருக்க பெண்ணோட சேர்த்து வச்சு பேசுற அசிங்கமா இல்லை எனக் கேட்க நீ செய்றது அசிங்கமா இல்லை. நான் பேசுறது அசிங்கமா இருக்கா என பேசிக்கொண்டு இருக்கிறார். கடுப்பாகி பழனி சென்று விடுகிறார்.