அடங்கப்பா இது உலக மகா நடிப்புடா சாமி! பாண்டியன் ஸ்டோர்ஸ்2-ல இப்படி ஒரு கலவரமா?

pandian stores2
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.
மீனா மற்றும் சுகன்யா பிரச்னை குறித்து கோமதி செந்திலிடம் சொல்ல அவர் பேச வரும் போது மீனா தடுத்து விடுகிறார். சுகன்யாவிடம் இனிமேல் இப்படி பேசக்கூடாது என பாண்டியன் சொல்ல மீனா சரியென தலையாட்டி அமைதியாகி விடுகிறார்.
ரூமிற்கு வரும் செந்தில் நீ ஏன் அமைதியாக இருந்த? அங்கு நடந்ததை சொல்ல வேண்டித்தானே என கோபமாக பேச மீனா இப்போ இதை பேச வேண்டாம் என அவரை அமைதியாக்கி விடுகிறார். ஆனால் இதை யாரிடமும் சொல்லாமல் இருக்க கூடாது.
பழனி சித்தப்பாவிடம் சொல்லலாம் என செந்திலை அழைத்து கொண்டு வாசலுக்கு வந்து காலேஜில் நடந்ததை சொல்லுகிறார். சுகன்யாவை கவனிக்குமாறு கூறி செல்கின்றனர். பின்னர் ரூமில் ராஜி மற்றும் கதிர் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டுள்ளனர்.

போலீஸ் வேலைக்காக படித்துக்கொண்டு இருப்பது குறித்து ராஜி பேசுகிறார். ராஜி பிறந்தநாள் குறித்து கேட்டு சார் ஒருவர் அவர் மனைவிக்கு கார் வாங்கி தந்ததை கூற அப்போ பிறந்தநாளுக்கு கார் வாங்கி தரப்போறீயா என்கிறார். அவ்வளவுக்கு எனக்கு வழி இல்லை அம்மா என்கிறார்.
ரூமிற்கு வரும் பழனி சுகன்யாவிடம் கல்லூரியில் நடந்த விஷயங்களை கேட்கிறார். ஆனால் சுகன்யா இப்போ எப்படி உனக்கு தெளிவா தெரிந்தது எனக் கேட்க பழனி நீ என்ன நினைச்சிக்கிட்டு இருக்க, குமார் காதலுக்கு ஹெல்ப் பண்ண பாக்குறீயா என்கிறார்.
உடனே சுகன்யா, பழனி மற்றும் மீனா குறித்து அசிங்கமாக சேர்த்து பேச கோபமாகி விடுகிறார். அதில் கழுத்தை பிடித்து திட்டுகிறார். சுகன்யா மீண்டும் பேசப்போக பழனி அடித்து விடுகிறார். இதனால் ரூமில் கத்தி பிரச்னை செய்ய பாண்டியன் மற்றும் கோமதி கதவை தட்டுகின்றனர்.