சக்திவேலின் திடீர் ஐடியா… அரசி வாழ்க்கையில் நடக்க போகும் மாற்றம்.. இனி அதிரடிதான்

pandian stores2
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரின் இன்றைய எபிசோட்டின் தொகுப்புகள்.
பாண்டியன் வெளியில் கிளம்ப அதை பார்க்கும் சக்திவேல் அவரை நக்கல் செய்கிறார். ஆனாலும் பாண்டியன் எதுவும் பேசாமல் கிளம்பி செல்கிறார். பழனி சக்திவேலை திட்டிவிடுகிறார். வெற்றிவேல் அங்கு வர அவரும் எதுவும் பேசாமல் போகிறார்.
இதை பார்க்கும், குமரவேலிடம் அரசியை கல்யாணம் செய்துக்கொள் என ஐடியா கொடுக்கிறார் சக்திவேல். இதற்கு குமரவேல் இப்போ எப்படி நடக்கும் எனக் கேட்க நீயே யோசி அரசி இந்த வீட்டு மருமகளா வரணும் எனச் சொல்லி விட்டு செல்ல இதை கேட்கும் குமார் கேள்வியாக யோசித்து கொண்டு இருக்கிறார்.
வீட்டில் அரசி அழுதுக்கொண்டு இருக்கிறார். கோமதி என்னுடைய பெரிய அண்ணனிடம் பேச வேண்டும் எனச் செல்கிறார். ஆனால் மகன்கள் அவரை போக வேண்டாம் என்கின்றனர். கோமதி வலுக்கட்டாயமாக சென்று பேசப்போக கதிரும், சரவணும் கூட வருகின்றனர்.

pandian stores2
கோமதி முத்துவேலை அழைக்க அங்கு வரும் சக்திவேல் திமிராக பேசுகிறார். அப்பத்தா, குமார் அம்மா என கோமதிக்கு சப்போர்ட் பேச முத்துவேல் அப்போ வருகிறார். என்ன பேசணும் என முத்துவேல் கேட்க கோமதி தன்னுடைய வாழ்க்கை கஷ்டத்தில் இருந்து பேச அவர் பழைய விஷயங்களை சொல்லாதே என்கிறார்.
உன் கோபத்தை தப்பா சொல்லலை. ஆனா என் பெண்ணோட வாழ்க்கையில் விளையாடாதீங்க. என் புருஷனை விட்ருங்க என கையெடுத்து கும்பிடுகிறார். அருகில் இருக்கும் சக்திவேல் திமிராக பேசிக்கொண்டே இருக்க கடுப்பாகி விடுகிறார் கோமதி.
நீ எனக்கு தங்கச்சி இல்ல. யாரோ ஒருத்தி இருந்தும் உன் மகள் வாழ்க்கையில் எங்க வீட்டு பையனால பிரச்னை வராது. உசுரே போனாலும் சொன்ன வாக்கை காப்பாத்துறவன் இந்த முத்துவேல். போ என்கிறார். கோமதி போய்விடுகிறார். சக்திவேல் மீண்டும் திமிராக பேச முத்துவேல் குமாரை மிரட்டி செல்கிறார்.
பின்னர், குமாருக்கு பெண் பார்க்க செல்வதாக சொல்ல சக்திவேல் மற்றும் குமார் அதிர்ச்சி அடைகின்றனர். சக்திவேல் குழம், கோத்திரம் பார்க்கணும் என மழுப்ப முத்துவேல் குமார் அந்த பெண்ணை தான் கட்டிக்கணும்னு சொல்லிவிட்டு செல்கிறார். அரசி படிப்பை நிறுத்த முடிவெடுக்கிறார் கோமதி. மருமகள்கள் அவருக்கு ஆதரவாக பேசுகின்றனர்.