அரசி விஷயத்தில் புது பிரச்னையை கிளப்பும் பாண்டியன்… இனிமே தான் ஆட்டம் சூடுபிடிக்கும்!

by Akhilan |
அரசி விஷயத்தில் புது பிரச்னையை கிளப்பும் பாண்டியன்… இனிமே தான் ஆட்டம் சூடுபிடிக்கும்!
X

pandian stores2

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.

பாண்டியன் ஹாலில் வந்து உட்கார அரசியை மீண்டும் திட்டிக்கொண்டு இருக்கிறார் கோமதி. அரசி அழுதுக்கொண்டே பாண்டியனிடம் மன்னிப்பு கேட்கிறார். அம்மாச்சி உங்கள பத்தியே பேசுறாங்க, உங்க அம்மா அவங்க அண்ணனோட சேரணும் நினைப்பாங்க.

நாம ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சிக்கிட்டா எல்லாம் சரியாகிடும் என அவர் சொன்னதாக சொல்கிறார். கோமதி அறிவு இருக்கா உனக்கு. உன் வாழ்க்கையை பணயம் வச்சு செய்ய நீ என்ன தியாகியா என்கிறார். பழனி அக்கா கல்யாணத்தில நடந்த பிரச்னை ராஜி கல்யாணத்தில விரிசல் தானே ஆச்சு என்கிறார்.

கோமதி அரசியை மீண்டும் திட்டிக் கொண்டே இருக்கிறார். அரசி பாண்டியனிடம் இனிமே அவரோட பேச மாட்டேன். தயவு செஞ்சி என்னிடம் பேசுங்க என காலில் விழுந்து கெஞ்சுகிறார். அரசிக்கு உடனே கல்யாணம் செய்து வைக்க முடிவு எடுத்து படிப்பை நிறுத்துகிறார் கோமதி.

அரசி என்ன வேண்டுமானாலும் செஞ்சிக்கோ அம்மா. ஆனா அப்பாவை என்னிடம் பேச சொல்லுமா எனக் கெஞ்சுகிறார். அரசியும் கதிரிடமும் அப்பாவை பேச சொல்லு அண்ணா எனக் கெஞ்ச மருமகள்கள் பாண்டியனிடம் அரசி அழுதுக்கிட்டே இருக்கா பேசுங்க மாமா எனக் கெஞ்சிக் கேட்கின்றனர்.

pandian stores2

அரசியை தங்கமயில் அப்பா, அம்மா மேல சத்தியம் பண்ணு எனக் கூற உடனே அரசி சத்தியம் செய்கிறார். இனிமே இந்த விஷயத்தை செய்யவே மாட்டேன். இந்த ஒருமுறை நம்புங்க எனக் கூறுகிறார். சுகன்யா இதை கோபமாக பார்க்கிறார்.

அரசி ஒரு கட்டத்தில் மயங்கி சாய்கிறார். குடும்பத்தினர் அவரை தாங்கி உட்கார வைக்க பாண்டியன் அழுதுக்கொண்டே இருக்கிறார். அப்பா பேச வேண்டும் எனக் கேட்க பாண்டியன் மகளை அருகில் அழைத்து அணைத்து கொள்கிறார்.

கோமதி அழுக அவரை பழனி சமாதானாம் செய்கிறார். பாண்டியன் அரசியிடம் என்னப்பா குறை வச்சேன் எனக் கேட்க அரசி அப்படியெல்லாம் இல்லப்பா. என்னை கொன்னு போட்டுடுங்கப்பா எனக் கெஞ்ச பாண்டியன் அழுதுக்கொண்டே இருக்கிறார்.

குமார் தன்னிடம் வந்து பேசிய போதே நான் யோசிச்சிருக்கணும். நான் புத்திக்கெட்டு போய் செஞ்சிட்டேன். குடும்பத்தையே அசிங்கப்படுத்திட்டேன் எனக் கூற மற்றவர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லி அமைதியாக்குகின்றனர். பாண்டியன் மீண்டும் வெளியில் செல்ல வந்து சொல்வதாக போகிறார்.

Next Story