Pandian Stores2: ஆத்தாடி! இவன் சாகலையப்பா… மூச்சுவிட்ட மீனா… ஒரு வழியா கதையை முடிச்சு விட்டீங்களே!

by Akhilan |   ( Updated:2025-05-01 03:49:55  )
Pandian Stores2: ஆத்தாடி! இவன் சாகலையப்பா… மூச்சுவிட்ட மீனா… ஒரு வழியா கதையை முடிச்சு விட்டீங்களே!
X

Pandian stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.

ராஜி கால் செய்து குமரவேல் சாகவில்லை எனக் கூற கதிர் உண்மையா தான் சொல்லுறீயா எனக் கேட்க ஆமாம் அவனுக்கு மயக்கம் தான் என்கிறார். செந்தில் நீங்க எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க எனக் கூறுகிறார். ராஜி வந்து மற்றவர்களிடமும் ரூமை விட்டு ஜாக்கிரதையாக இருங்க என்கிறார்.

ஒரு கட்டத்தில் கோமதி உண்மையாவே அவன் உயிரோட தான் இருக்கானா நான் வேற கடவுளை எல்லாம் திட்டிட்டேன் எனக் கூற மீனா உண்மையாவே அவன் சாகலை தானே எனப் பேசிக்கொண்டு இருக்கிறார். இதை தொடர்ந்து கதிர் மற்றும் செந்தில் இருவரும் வருகின்றனர்.

என்ன ஆச்சு எனக் கேட்க கதிர் எங்க குமரவேல் என்கிறார். செந்திலை பார்த்ததும் மீனா அழுதுக்கொண்டு இருக்கிறார். ரூமிற்குள் சென்று குமரவேலை பார்க்க அவரை தண்ணீர் தெளித்து எழுப்ப அவர் மயக்கம் தெளிந்து எழுந்திருக்கிறார்.

பின்னர் சுதாரித்து கொண்டு கதிர் மற்றும் செந்திலிடம் இருந்து தப்பித்து ஓடிவிடுகிறார். வீட்டிற்குள் வந்து அவர் தப்பித்து விட்டதாக கூற எல்லாருக்கும் அப்போது ஓரளவு நிம்மதி வருகிறது. அரசி தன்னால் தான் இந்த கஷ்டம் எனக் கூறி மன்னிப்பு கேட்கிறார்.

மீனாவும் கொலை செய்துவிட்டு இருந்த நிலைமையை நினைத்து பேசிக்கொண்டு இருக்க அவரை செந்தில் சமாதானம் செய்கிறார். கோமதி உன்னை ஜெயிலுக்கு தான் அனுப்பி இருக்கவே மாட்டேன் என்கிறார். ஓரளவுக்கு குமரவேல் உயிருடன் இருப்பது பலருக்கும் நிம்மதியை தருகிறது.

மீனா மற்றும் செந்தில் இருவரும் தனியாக அமர்ந்து கொலை செய்துவிட்டதாக நினைத்து மீனா அதிர்ச்சியில் இருந்த விஷயம் குறித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். மீனா அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்க அவரை சமாதானம் செய்து கொண்டு இருக்கின்றனர்.

Next Story