Pandian Stores2: அரசியின் கல்யாணத்தை நிறுத்த போகும் மாப்பிள்ளை… பாண்டியன் நிலை என்னவாகும்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.
பாண்டியன் கடையில் இருக்க செந்திலிடம் கார் குறித்து விசாரிக்க சொல்லுகிறார். அந்த நேரத்தில் மாப்பிள்ளை சதீஷ் கடைக்கு வருகிறார். எல்லாரும் அவருடன் பேசிக்கொண்டு இருக்கின்றனர். நான் சம்பாரிக்கிறேன். எனக்கு தேவையானதை நானே செஞ்சிப்பேன்.
அம்மா இப்படி கேட்பாங்கனு நினைக்கலை. நானே காசு தரேன் கார் நீங்க வாங்கி கொடுத்த மாதிரி கொடுங்க என்கிறார். இதை கேட்டு ஆச்சரியப்படும் பாண்டியன் மற்றும் மகன்கள் அதெல்லாம் வேண்டாம் என்கின்றனர். பழனி ஊர் உலகத்துல மொத்தமா ஆட்டைய போட நினைக்கும் மாப்பிள்ளை மத்தியில் நீங்க பெரிசு என்கிறார்.

மறுபக்கம் கோமதி அரசி மற்றும் மருமகள்களுடன் அம்பாசமுத்திரத்திற்கு வந்து விடுகிறார். அவர் பாண்டியனுக்கு கால் செய்து தாங்கள் வந்த விஷயத்தை சொல்ல அவரும் மாப்பிள்ளை வந்து சொன்னதை சொல்லி ஆச்சரியப்படுகிறார்.
பின்னர் மருமகள்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். தங்கமயில் சரவணன் கால் செய்வாரா என காத்திருக்க அவர் கால் வராமல் போக கவலை அடைகிறார். ராஜி ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க எனக் கேட்க மயில் வேலை லீவ் எனச் சொல்லி சமாளிக்கிறார்.
அரசி அங்கு வர மூவருடன் அம்மாவுடன் தங்க பயமா இருக்கு என்கிறார். அந்த நேரத்தில் மாப்பிள்ளை கால் செய்ய அரசி தயக்கத்துடன் பேசி சற்று நிமிடத்தில் வைக்க மூவரும் ஏன் எனக் கேட்கின்றனர். நான் அவர் கிட்ட பெரிய விஷயத்தை மறைக்கிறேன் என கவலையாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்.