பாண்டியனை காணாமல் தேடும் மகன்கள்… என்ன ஆனது? மகளால் எடுத்த திடீர் முடிவு!

by Akhilan |
பாண்டியனை காணாமல் தேடும் மகன்கள்… என்ன ஆனது? மகளால் எடுத்த திடீர் முடிவு!
X

pandian stores2

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.

அரசி அழுதுக்கொண்டு இருக்க அவரை சமாதானம் செய்கிறார் ராஜி. செந்தில் மற்றும் கதிருடன் பழனியும் சேர்ந்து ஊர் முழுவதும் பாண்டியனை தேடுகின்றனர். கடைக்கு சென்று இருப்பார் என பார்த்தால் அங்கும் அவர் இல்லாமல் கதிரேசன் மாமா மட்டுமே இருக்கிறார்.

இன்னும் பல இடங்களில் தேட அப்போது பாண்டியன் கிடைக்காமல் போகிறார். கதிர் திடீரென பேருந்து நிலையம் அறையில் பார்க்க அங்கு ஆதரவு இல்லாதவர்களுடன் பாண்டியன் படுத்து இருக்கிறார். இதை பார்த்த கதிர் அழுதுக்கொண்டே அவரை எழுப்புகிறார்.

pandian stores2

பாண்டியனும் எழுந்து எதுவும் பேசாமல் அவர் கூப்பிட வெளியில் வர அவருக்கு தண்ணீர் கொடுத்து முகத்தை கழுவ சொல்கிறார் கதிர். பின்னர் கதிர் அழுவதை பார்த்து பாண்டியனும் மகனை அணைத்துக்கொண்டு அழுது விடுகிறார்.

தொடர்ந்து, செந்தில் மற்றும் பழனியிடம் சொல்ல அவர்களும் அங்கு வந்து விடுகின்றனர். அவர்கள் பாண்டியனை சமாதானம் செய்து பைக்கில் அனுப்பி வைக்கிறார்கள். அவர்கள் பின்னால் பழனியும் கிளம்பி செல்கிறார். வீட்டில் கோமதி அழுதுக்கொண்டு இருக்கிறார்.

Also Read: பரமு கல்யாணத்தில் நடந்த சண்டை… மீனாவுக்கு விழுந்த அடி… அடுத்த பரபரப்பு!

Next Story