அரசியின் காதலால் திடீர் முடிவெடுத்த பாண்டியன்… அதிர்ச்சியில் குடும்பம்.. என்ன நடக்க போகுதோ?

by Akhilan |   ( Updated:2025-03-27 02:51:52  )
அரசியின் காதலால் திடீர் முடிவெடுத்த பாண்டியன்… அதிர்ச்சியில் குடும்பம்.. என்ன நடக்க போகுதோ?
X

Pandian stores2

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரின் இன்றைய எபிசோட்டின் தொகுப்புகள்.

கோமதி வீட்டில் அரசியை இனிமேல் கல்லூரிக்கு அனுப்ப மாட்டேன் என சொல்லி விடுகிறார். இதற்காக மருமகள்கள் ராஜி, தங்கமயில் மற்றும் மீனா மூவரும் அரசிக்கு படிப்பு வேண்டும் எனக் கூற கோமதி திட்டவட்டமாக அவர்கள் பேச்சைக் கேட்க மறுத்து விடுகிறார்.

பாண்டியன் தன்னுடைய அக்கா உமையாள் வீட்டுக்கு வருகிறார். அவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது அவர் அக்கா, அரசியை எங்களுக்கு பிடிச்சு இருக்கு. கோமதியிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவ பிடிக்கொடுக்கலை.

நீயும் அவ படிக்கணும். வேலைக்கு போகணும் என நீ சொன்னது சரிதான். இருந்தாலும் கொஞ்சம் கஷ்டமா இருக்கு என அவர் சொல்ல பாண்டியன் அந்த கல்யாணத்துக்கு சரியென சொல்லி சம்மதம் சொல்லி விடுகிறார். இத சொல்ல தான் வந்ததாக சொல்லி விடுகிறார்.

#image_title

அவர் அக்கா மற்றும் மாமா சந்தோஷப்படுகின்றனர். நிச்சய தேதி குறித்து பேசிவிட்டு மாப்பிள்ளையை நேரில் பார்த்து கொள்கிறேன் எனக் கிளம்புகிறார். வெளியில் வந்து பழனியிடம் அரசி விஷயம் பயமாக இருக்கிறது. உடனே கல்யாணத்தினை முடிச்சிடணும் என்கிறார்.

வீட்டுக்கு வரும் பாண்டியன் அரசியை அழைத்து பேச அவர் ஆச்சரியத்துடன் செல்கிறார். எல்லாரும் அமர்ந்து சாப்பிடுகின்றனர். பின்னர் பாண்டியன் அரசியை அழைத்து மாப்பிள்ளை பார்த்த விஷயத்தை சொல்ல மகன்களிடமும் இதை சொல்கிறார்.

ஆனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். சுகன்யா இந்த கல்யாணம் எல்லாம் வேண்டாம் என சொல்கிறார். கோமதி கடுப்பாகி திட்டுகிறார். தங்கமயிலும் வயசு இல்லையே எனக் கேட்க கோமதி அவருக்கும் நோஸ் கட் தருகிறார். சரவணன் பாண்டியன் முடிவுக்கு சப்போர்ட் செய்கிறார்.

மருமகள்கள் அரசிக்காக பேச கடைசியில் பாண்டியன் தன் மகளிடமே இதுகுறித்து கேட்கிறார். அவர் அதிர்ச்சியாக பார்க்கிறார்.

Next Story