பாண்டியன் ஸ்டோர்ஸில் மீண்டும் மாற்றப்படும் முல்லை... புதிய முல்லை யார் தெரியுமா?

by ராம் சுதன் |
kaviya
X

விஜய் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். காரணமாக அண்ணன் தம்பிகளை மையப்படுத்தி கூட்டு குடும்ப கதையாக உள்ளதால் இந்த தொடருக்கு ரசிகர்கள் அதிகம்.

kaviya arivumani

இதில் தற்போது முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடிகை காவியா அறிவுமணி நடித்து வருகிறார். முன்னதாக மறைந்த நடிகை விஜே சித்ரா தான் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த சமயத்தில் அவர் மிகவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

raja rani

இந்நிலையில் அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் அவர் மறைவுக்கு பின்னர் அந்த கதாபாத்திரத்தில் நடிகை காவியா அறிவுமணி நடித்து வருகிறார். இவரை முல்லையாக மக்கள் ஏற்கவே சில காலம் பிடித்தது. தற்போது தான் இவரை முல்லையாக பார்க்க தொடங்கி உள்ளார்கள்.

இப்படி உள்ள நிலையில் மீண்டும் முல்லை கேரக்டரை மாற்ற உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதன்படி காவியா அறிவுமணிக்கு தற்போது பட வாய்ப்புகள் வருவதால் அவர் தொடரில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது.

alya manasa

இவர் ஏற்கனவே கவின் நடிப்பில் உருவாகி வரும் ஊர்க்குருவி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காவியாவுக்கு பதில் முல்லை கேரக்டரில் விஜய் டிவி பிரபலம் ஆல்யா மானசா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இந்த தகவல் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

Next Story