Connect with us
Pandiyarajan

Cinema History

நடிகையின் கன்னத்தில் ‘பளார்’… பாண்டியராஜனுக்கு வந்த கோபம்… மனுஷன் இப்படியா செய்வாரு?

80 மற்றும் 90களில் நகைச்சுவை கலந்து ஹீரோயிசம் பண்ணும் நடிகர்கள் ரொம்பவே குறைவு. அதனால் பாண்டியராஜன், எஸ்.வி.சேகர் படங்கள் என்றாலே தனி மவுசு தான். அவரது படங்களில் எந்த விதமான விரசமான இரட்டை அர்த்தம் கொண்ட காமெடிகளும் இருக்காது. அதனால் தாய்மார்களின் கூட்டம் வரிந்து கட்டிக்கொண்டு தியேட்டருக்கு வரும்.

ஆண்பாவம் படமும் அப்படித்தான். பாண்டியராஜனின் திரையுலகப் பயணத்தில் இது ஒரு மைல் கல். இந்தப் படத்தில் ஒரு சுவாரசியமான சம்பவம் அரங்கேறியது.

இதையும் படிங்க… மலையாளக் கரையோரம்… பாடலில் முதலில் நடிக்க இருந்தது இவரா? அப்புறம் எப்படி மிஸ் ஆச்சு?

இயக்குனர் பாக்கியராஜின் சிஷ்யன் தான் பாண்டியராஜன், பார்த்திபன். இவர்கள் இருவரும் தனித்தனிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்து விட்டனர். பாண்டியராஜன் இயக்கிய முதல் படம் கன்னி ராசி. இதன் வெற்றியைத் தொடர்ந்து அவர் இயக்கிய 2வது படம் ஆண்பாவம். படத்தில் அவரது பாட்டியாக வருபவர் கொல்லங்குடி கருப்பாயி. படத்தில் வி.கே.ராமசாமி உடன் பாண்டியராஜன் அடிக்கும் லூட்டி ரொம்பவே ரசிக்கும் வகையில் இருக்கும். வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடிகள் படத்தில் ஏராளம் உண்டு.

இந்தப் படத்தில் பாண்டியராஜன் உடன் பாண்டியன், ரேவதி, சீதா ஆகியோரும் நடித்து இருந்தனர். சீதாவுக்கு இது தான் முதல் படம். படத்தில் பல காட்சிகளில் சீதா சரியாக நடிக்கவில்லையாம். அது பாண்டியராஜனுக்கு அதிகமான கோபத்தை வரவழைத்ததாம். படத்தில் ஒரு காட்சிப்படி வாட்ச் ஒன்று கொதிக்கும் நீரில் விழுந்து விட, அதை எடுத்து முந்தானையால் துடைத்து ஓடுகிறதா என்று காதருகே வைத்துப் பார்க்க வேண்டும்.

Aanpavam

Aanpavam

அதன்படி சீதா சரிவர நடிக்கவில்லையாம். தாவணி முந்தானையால் எடுத்து நடிக்கும்போது கேமராவைப் பார்க்கக்கூடாதாம். ஆனால் நடிக்கும்போது கேமராவைப் பார்த்து விடுகிறார். இதனால் அந்தக் காட்சி அதிகமாக ரீ டேக் வாங்கியதாம். இது பாண்டியராஜனுக்குக் கோபத்தைக் கிளப்ப ஒரு கட்டத்தில் அடிக்கக் கை ஓங்கி இருக்கிறார். அந்த நேரம் பார்த்து இவர் எழுந்தாராம். அடி உண்மையிலேயே அவர் கன்னத்தில் விழ, கோபித்துக்கொண்டு வெளியே சென்று விட்டாராம் சீதா.

அதன்பிறகு அவரை சமாதானம் செய்து மீண்டும் அந்தக் காட்சியைப் பொறுமையாக எடுத்தாராம் பாண்டியராஜன். காட்சி முடிந்ததும் அதை சீதா பார்க்க அவருக்கே ஆச்சரியமாக இருந்ததாம். நானா இப்படி நடித்தேன் என்று அவருக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. அதன்பிறகு தன் தவறுக்காக பாண்டியராஜனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாராம்.

அந்த மனசு தான் அவரை இன்றளவும் நல்ல நடிகை என்ற அடையாளத்தைக் கொடுத்துள்ளது. அதன்பிறகு அவர் நடித்த பல படங்கள் சூப்பர்ஹிட். குறிப்பாக உன்னால் முடியும் தம்பி, புதிய பாதை போன்ற படங்கள் எவர்கிரீன் ஹிட்டானது.

google news
Continue Reading

More in Cinema History

To Top