
Cinema News
தாவணிய கழட்ட மறுத்த நடிகை… கோபத்தில் அறைந்த இயக்குனர்…. யார் தெரியுமா?
சினிமாவை பொருத்தவரை ஒரு ஹீரோ இப்படித்தான் இருக்க வேண்டும் என சில விஷயங்கள் உள்ளன. ஆனால் அதையெல்லாம் உடைத்தெறிந்து உயரம் குறைவான நபரும் ஹீரோவாக சாதிக்கலாம் என நிரூபித்து காட்டியவர் தான் நடிகர் பாண்டியராஜன். இவரை ஒரு நடிகராகவே பலருக்கும் தெரியும்.
ஆனால் பாண்டியராஜன் அடிப்படையில் ஒரு இயக்குனர். கன்னிராசி என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பாண்டியராஜன் ஆண்பாவம் படம் மூலம் தான் ஒரு நடிகராகவும் தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். இந்த படம் அந்த சமயத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. அதற்கு முக்கிய காரணம் பாண்டியராஜ் எழுதிய திரைக்கதையும், கதை ஓட்டமும் தான்.

actress seetha
சமீபத்தில் ஆண்பாவம் படத்தில் நாயகியாக நடித்த சீதாவுடன் ஏற்பட்ட சண்டைகள் குறித்து இயக்குனரும் நடிகருமான பாண்டியராஜன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “அப்பாவுக்கு சுடு தண்ணீர் போடும்போது அதில் வாட்ச் விழுந்துவிடும். உடனே முந்தானையை விரித்து வடிகட்டி வாட்சை எடுத்து காதில் வைத்து பார்க்க வேண்டும் இதுதான் சீன்.
சீதாகிட்ட இருக்குற கெட்ட பழக்கம் என்னனா நடிச்சு முடிச்ச உடனே கேமராவ பாத்துடுவாங்க. ரெண்டு தடவை அந்த மாதிரி பண்ணதால நல்லா திட்டிட்டேன். அந்த சீன்காக முந்தானைய எடுத்து போட்டு வடிகட்ட சொன்னா, அதெல்லாம் நான் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் மேல் பக்க முந்தானை வேண்டாம் கீழ் பக்க முந்தானைய எடுத்து வடிகட்டுங்கன்னு சொன்னேன்.

actress seetha
செஞ்சிட்டு உடனே கேமராவ பாத்துட்டாங்க, கோவப்பட்டு திட்டிட்டேன். அந்த பக்க முந்தானை நனஞ்சு போச்சு. ரூம் உள்ள போயி இன்னொரு பக்கத்தை மாத்தி காட்டிக்கிட்டு வாங்கன்னு சொன்னேன். அப்படி ஷூட் பண்ணியும் மறுபடியும் நடிச்சு முடிச்சுட்டு கேமராவ பாத்துட்டாங்க. நான் எத்தன தடவ சொல்றதுன்னு கைய நீட்டினேன் அப்போ அவங்க முன்னாடி வந்ததால என் கை அவங்க கண்ணத்துல பட்டு அறைஞ்ச மாதிரி ஆகிடுச்சு.

pandiyarajan
அப்புறம் ஒரே அழுகை, அவங்கள சமாதான படுத்த ரொம்ப நேரம் ஆச்சு. அப்புறம் எப்படியோ அந்த சீன எடுத்து முடிச்சோம்” என ஆண்பாவம் படத்தின் படப்பிடிப்பில் நடந்த ரகளைகளை பாண்டியராஜன் பகிர்ந்துள்ளார்.