அப்படிப்போடு!.. அபிநயா எப்படி ஆட்டம் போடுறாரு பாருங்க!.. சீக்கிரமே டும் டும் டும் தான் போல!..

by Saranya M |   ( Updated:2025-04-09 09:11:56  )
அப்படிப்போடு!.. அபிநயா எப்படி ஆட்டம் போடுறாரு பாருங்க!.. சீக்கிரமே டும் டும் டும் தான் போல!..
X

நடிகை அபிநயா சமீபத்தில் அளித்திருந்த பேட்டி ஒன்றில் தான் ரிலேசன்ஷிப்பில் இருப்பதை உறுதிப்படுத்தியிருந்த நிலையில் தற்போது வருங்கால கணவருடன் நைட் பார்ட்டியில் கலந்துக்கொண்டிருந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

நடிகை அபிநயா இயக்குநர் சசிகுமார் தயாரிப்பில் சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவான நாடோடிகள் படத்தில் நடித்து பிரபலமானார். அதை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். மேலும், அபிநயா ஈசன், ஏழாம் அறிவு, தி ரிப்போர்ட்டர், தம்மு, பூஜை, மார்க் ஆண்டனி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜ் இயக்கி ஹீரோவாக நடித்த பணி படத்தில் மிகவும் தத்ரூபமாக நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். மேலும், அபிநயா தன்னுடைய நடிப்பு திறமையினால் காது கேட்காமல் வாய் பேச முடியாமல் இருக்கும் அவரது குறையையே திரையில் தெரியாத அளவிற்கு மறைத்து விடுகிறார்.

நடிகர் வீஷாலுடன் அபிநயாவை இணைத்து ஒரு கிசுகிசு பரவியிருந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அபிநயா அண்மையில் அளித்த பேட்டியில் தான் 15 வருடங்களாக காதலித்து வரும் தன் நண்பரையே திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக வெளிப்படையாக கூறியிருந்தார். மேலும், கடந்த மாதம் இருவரும் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது, அபிநயா தனது காதலனுடன் நைட் பார்டியில் ஆட்டம் போடும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், ஒன்றாக என்றென்ரும் குடும்பமாக இருக்க வேண்டும் என கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார். அபிநயாவின் புதிய வாழ்க்கை தொடக்கத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Next Story